பிரதமர் நரேந்திர மோடியின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் பயனடைந்தவர்கள் எண்ணிக்கை 1 கோடி என்ற மைல்கல்லைக் கடந்தது. இது பலரது வாழ்க்கையில் நம்பிக்கை ஓளியூட்டியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
செப்டம்பர் 2018-ல் மோடி பிரமதமர் ஜன் ஆரோக்கிய யோஜனா-ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை அறிமுகம் செய்தார். இது உலகிலேயே மிகப்பெரிய அரசு ஆதரவு சுகாதார திட்டம் என்று கூறப்பட்டது.
இது தொடர்பாக ட்விட்டரில் பிரதமர் மோடி, “ஆயுஷ்மான் பாரத் பயனாளிகள் எண்ணிக்கை 1 கோடியைக் கடந்திருப்பது என்பது ஒவ்வொரு இந்தியரையும் பெருமையடையச் செய்யும். இது பலரது வாழ்க்கையில் நம்பிக்கை ஓளியேற்றியுள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.
பயனளிகளான அனைத்து குடும்பத்தினரையும் வாழ்த்திய மோடி அவர்களது நல் ஆரோக்கியத்துக்காக பிரார்த்திப்பதாகக் கூறி, மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் இவர்களோடு ஆயுஷ்மான் பாரத்துடன் தொடர்புடைய அனைவரையும் பாராட்டினார்.
இந்த முயற்சி பல இந்தியர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகியுள்ளது குறிப்பாக ஏழைகள் மற்றும் நலிவுற்றவர்களுக்கு இது நம்பிக்கை அளிக்கிறது.
பயனாளிகள் உயர்தரமான மருத்துவ சிகிச்சைகளை குறைந்த செலவில் பெற முடியும். இதன் பயனை பதிவு செய்தவர்கள் மட்டுமல்ல இந்தியாவின் பிற பகுதிகளில் உள்ளவர்களும் இதன் பயனை அனுபவிக்க முடியும். அதாவது வெளிமாநிலங்களில் வேலை செய்பவர்களும் அங்கு பதிவு செய்து இதன் பயனைப் பெற முடியும்
தன்னுடைய பயணங்களின் போது ஆயுஷ்மான் பாரத் பயனாளிகளுடன் நான் உரையாடுவேன். இந்த நாட்களில் இது சாத்தியமில்லை ஆனால் மேகாலயாவைச் சேர்ந்த பூஜா தபாவிடம் தொலைபேசி உரையாடல் செய்யும் வாய்ப்புக் கிடைத்தது.இவர்தான் ஒரு கோடியாவது பயனாளி இவர் ராணுவ வீரரின் மனைவி” என்றார் பிரதமர் மோடி.
பூஜா தபா என்பவருடன் நடத்திய உரையாலின் ஆடியோவ்ஐ பிரதமர் மோடி வெளியிட்டுள்லார், அதில் அவர் ஆயுத்மான் பாரத் வசதியைப் பயன்படுத்தி தனக்கு ஷில்லாங்கில் நடந்த அறுவைச் சிகிச்சை பற்றி கூறினார், இவரது கணவர் மணிப்பூரில் பணியாற்றி வருகிறார். கரோனா லாக் டவுனினால் அறுவை சிகிச்சையின் போது ராணுவ வீரரால் மனைவியுடன் இருக்க முடியவில்லை.
இவரது குழந்தைகளை அண்டை வீட்டார் கவனித்துக் கொண்டனர்.
பிரதமர் மேலும் இவரிடம் கேட்டறிந்த போது, அறுவைச் சிகிச்சைக்கும் மருந்துக்கும் அவர் கட்டணம் எதுவும் செலுத்தவில்லை என்றும் ஆயுஷ்மான் பாரத் திட்ட அட்டை இல்லையெனில் கடன் வாங்காமல் இந்த அறுவைச் சிகிச்சை நடைபெற வாய்ப்பில்லை என்றும் தெரிவித்தார்.
இதனையடுத்து ஆயுஷ்மான் பாரத் திட்டம் குறித்து பிரதமர் மோடி பெருமிதம் அடைந்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago