கரோனா வைரஸால் கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் நிறுவனங்கள் உற்பத்தியின்றி மூடப்பட்ட சூழலிலும் ஊழியர்களுக்குப் பிடித்தமின்றி ஊதியம் வழங்கிட வேண்டும் என்று மார்ச் மாதம் 29-ம் தேதி பிறப்பித்த உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகம் திரும்பப் பெற்றுள்ளது
லாக்டவுன் காலத்தில் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு முழு ஊதியம் வழங்க வேண்டும் என 2005-ம் ஆண்டு தேசியப் பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின்படி அறிவித்திருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து பல்வேறு நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கை கடந்த 15-ம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றம் தடை விதித்து, மத்திய அரசு பதில் அளிக்கக் கோரியிருந்தது. இந்த சூழலில் மார்ச் 29-ம் தேதி பிறப்பித்த உத்தரவை மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளது.
இது தொடர்பாக மத்திய உள்துறையின் செயலாளர் அஜெய் பல்லா வெளியிட்ட உத்தரவில் “ 4-வது லாக்டவுன் தொடர்பாக வெளியிடப்பட்ட விழிகாட்டு நெறிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளதால் இதற்கு முன்பு 2005 தேசியப் பேரிடர் மேலாண்மைச் சட்டத்தில் பிரிவு 10(2)(1)ன்படி தேசிய நிர்வாகக்குழு பிறப்பித்த உத்தரவுகள் 18-ம் தேதி முதல் நிறுத்தி வைக்கப்படுகின்றன. அதாவது மார்ச் 24, 29, ஏப்ரல் 14, 15, மே 14-வது லாக்டவுனின் வழிகாட்டி நெறிமுறைகளே நடைமுறையில் இருக்கும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த மார்ச் 29-ம் தேதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மும்பையைச் சேர்ந்த பின்னலாடை நிறுவனம், பஞ்சாப்பில் உள்ள 41 சிறுதொழில் நிறுவனங்கள் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தன.
இந்த மனுவை கடந்த 15-ம் தேதி விசாரித்த நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், சஞ்சய் கிஷன் கவுல், பிஆர் காவே ஆகியோர் அமர்வு, பிறப்பித்த உத்தரவில், “சிறு நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு முழு ஊதியத்தையும் அடுத்த வாரத்துக்குள் தராத நிலை ஏற்பட்டால்கூட அந்த நிறுவனங்கள் மீது எந்த நடவடிக்கையும் மத்திய அரசு, மாநில அரசுகள் சார்பில் எடுக்கக்கூடாது. சிறு நிறுவனங்கள் போதுமான வருவாய் ஈட்டாத நிலையில் அவர்களால் ஊதியம் வழங்க இயலாது.
பெரும்பாலான சிறு நிறுவனங்கள் உற்பத்தி இல்லாமல் 15 நாட்கள் வரை மட்டுமே தாங்கும் சக்தியுள்ளதாக இருக்கின்றன. ஆனால், லாக்டவுனில் 40 நாட்களுக்கும் மேலாக உற்பத்தி நடக்காமல் இருந்தால் எவ்வாறு அவர்களால் ஊதியம் வழங்க இயலும். இந்த விவகாரத்தில் மத்திய அரசு அடுத்த வாரத்துக்குள் பதில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
17 mins ago
இந்தியா
21 mins ago
இந்தியா
32 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago