39 ஆயிரம் பேர் குணமடைந்தனர்: இந்தியாவில் கரோனா பாதிப்பு ஒரு லட்சத்தைக் கடந்தது; தமிழகம் மீண்டும் 2-வதுஇடம்; 3-வது நாளாக ஏறக்குறைய 5 ஆயிரம் பாஸிட்டிவ்

By பிடிஐ


இந்தியாவில் கரோன வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதியிலிருந்து லாக்டவுனில் இருந்தும், பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இன்று ஒரு லட்சத்தைக்கடந்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 163 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

கடந்த 24 மணிநேரத்தில் கரோனா வைரஸால் 4ஆயிரத்து 970 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து 3-வது நாளாக ஏறக்குறைய 5 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 134 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் ஒட்டுமொத்தமாக கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்து ஆயிரத்து 139 ஆக அதிகரித்துள்ளது.இதில் கரோனவிலிருந்து குணமடைந்து சென்றோர் எண்ணிக்கை 39 ஆயிரத்து 173 ஆக அதிகரித்துள்ளது, மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர எண்ணி்கை 58 ஆயிரத்து 302 ஆக அதிகரித்துள்ளது.

கரோனா பாதிக்கப்பட்ட மாநிலங்களில் கடந்த இரு நாட்களாக 3-ம் இடத்தில்இருந்த தமிழகம் இன்று 2-வது இடத்துக்கு மீண்டும் முன்னேறியது, குஜராத் 3-ம் இடத்துக்கு பின்தங்கியது.

கடந்த 24 மணிநேரத்தில் நிகழ்ந்த உயிரிழப்புகளில் மகாராஷ்டிராவில் 51 பேர், குஜராத்தில் 35 ேபர், உத்தரப்பிரதேசத்தில் 14 பேர், டெல்லியில் 8 பேர், ராஜஸ்தானில் 7 பேர், மேற்கு வங்கத்தில் 6 பேர், மத்தியப்பிரதேசத்தில் 4 பேர், தமிழகத்தில் 3 பேர், பஞ்சாப், ஜம்மு காஷ்மீரில் தலா 2 பேர், பிஹார், தெலங்கானாவில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர்

இன்று காலை 9 மணி நிலவரப்படி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

''மகாராஷ்டிர மாநிலத்தில் பலியானோர் எண்ணிக்கை 1,249 ஆக அதிகரித்துள்ளது. அடுத்த இடத்தில் உள்ள குஜராத்தில் உயிரிழப்பு 694 ஆகவும், மத்தியப் பிரதேசத்தில் உயிரிழப்பு 252 ஆக அதிகரித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் பலி எண்ணிக்கை 244 ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் உயிரிழப்பு 168 ஆகவும், ராஜஸ்தானில் பலி எண்ணிக்கை 138 ஆகவும் அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் பலி எண்ணிக்கை 81 ஆக அதிகரித்துள்ளது. தெலங்கானாவில் பலி எண்ணிக்கை 35ஆகவும், உத்தரப் பிரதேசத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 118 ஆகவும், ஆந்திராவில் 50 ஆகவும் இருக்கிறது. கர்நாடகாவில் 37 பேரும், பஞ்சாபில் தலா 37 பேரும் பலியாகியுள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் 15 பேரும், ஹரியாணாவில் தலா 14 பேரும், பிஹாரில் 8 பேரும், கேரளாவில் 4 பேரும், ஜார்க்கண்ட், ஒடிசாவில் தலா 4 பேரும் உயிரிழந்துள்ளனர். இமாச்சலப் பிரதேசத்தில் 3 பேரும், அசாம், மேகாலயா ஆகிய மாநிலங்களில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர்

மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 35,058ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 8,437 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 2 நாட்களாக 3-வது இடத்தில் இருந்த தமிழகம், 2-வது இடத்துக்கு முன்னேறியது. தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 11 ஆயிரத்து 760 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 4,406ஆகவும் அதிகரித்துள்ளது.

2-வது இடத்தில் இருந்த குஜராத் 3-வதுஇடத்துக்கு சரிந்தது.அங்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 11 ஆயிரத்து 745 ஆகவும்,குணமடைந்தார் 4,804 ஆகவும் உள்ளது

4-வது இடத்தில்உள்ள டெல்லியிில் 10,ஆயிரத்து 54 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,485 பேர் குணமடைந்துள்ளனர். ராஜஸ்தானில் 5,507 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 5,236 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 4,605 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேற்கு வங்கத்தில் 2,825 பேரும், ஆந்திராவி்ல் 2,474 பேரும், பஞ்சாபில் 1,980 பேரும், தெலங்கானாவில் 1,597 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் 1,289 பேர், கர்நாடகாவில் 1,246 பேர், ஹரியாணாவில் 928 பேர், பிஹாரில் 1,391 பேர், கேரளாவில் 630 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 497 பேர் குணமடைந்துள்ளனர்.

ஒடிசாவில் 876 பேர், சண்டிகரில் 196 , ஜார்க்கண்டில் 223 பேர், திரிபுராவில் 167 பேர், அசாமில் 107 பேர், உத்தரகாண்டில் 93 பேர், சத்தீஸ்கர் 93 பேர், இமாச்சலப் பிரதேசத்தில் 90 பேர், லடாக்கில் 43 பேர், மேகாலயாவில் 13 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரியில் 18 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் புதுச்சேரியில் 9 பேர் குணமடைந்தனர்.

மணிப்பூரில் 7 பேர், கோவாவில் 38 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மிசோரம், அருணாச்சலப் பிரதேசம், அந்தமான் நிகோபர் தீவு, பாதிக்கப்பட்டோர் யாருமில்லை''.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

33 mins ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

மேலும்