கரோனா வைரஸ் பாதிப்பு அதிகமில்லாத பகுதிகளில் பொருளாதார நடவடிக்கைகளுக்காக அத்தியாவசிய பொருட்களின் விற்பனை மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்தது. குறிப்பாக ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் அமேசான்,பிளிப்கார்ட் போன்றவை முற்றிலுமாக தங்கள் சேவையை ஊரடங்கால் நிறுத்தி வைத்திருந்தன.
மூன்றாம் கட்ட ஊரடங்கின் போது தொற்று குறைவாக உள்ளபச்சை மற்றும் ஆரஞ்சு பகுதிகளில்அத்தியாவசியமற்ற பொருட்களைடெலிவரி செய்ய அனுமதிக்கப்பட்டது. தற்போது கன்டெயின்மென்ட் பகுதிகள் என்று சொல்லப்படும் தொற்று அதிகம் உள்ளபகுதிகளைத் தவிர பிற இடங்களில் பொருட்களைத் தேவையான பாதுகாப்பு நடைமுறைகளுடன் டெலிவரி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இதுகுறித்து அமேசான் செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‘‘ஆறு லட்சம் சிறு வர்த்தகர்கள், சிறு, குறு தொழில் நிறுவனங்கள் ஊரடங்கால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் தங்களது பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டுவர அரசின் இந்த முடிவு உதவியாக இருக்கும். அரசு வகுத்துள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அமேசான் போன்ற இ-காமர்ஸ் நிறுவனங்கள் செயல்படும். இதன்மூலம் மக்களின் தேவை பூர்த்தியாவதோடு, வேலைவாய்ப்பு விஷயத்திலும் கணிசமான பாதிப்பு தடுக்கப்படும்” என்று கூறினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
54 mins ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago