கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடும்: தொற்றுநோய் நிபுணர் தகவல்

By செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் பாதிப்பு மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடும் என்று தொற்றுநோய் நிபுணர் கிரிதர் ஆர். பாபு தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. இதில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்து குஜராத்,தமிழகம், டெல்லியில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதுதொடர்பாக இந்திய பொது சுகாதார அறக்கட்டளை அமைப்பின் தொற்றுநோய் பிரிவு தலைவர் கிரிதர் ஆர். பாபு கூறியதாவது:

இந்தியாவை பொறுத்தவரை ஒவ்வொரு மாநிலமும் ஒரு நாட்டுக்கு சமமாகும். நாடு முழுவதும் கரோனா வைரஸ் பரவல் ஒரே மாதிரியாக இருக்காது. மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடும். குறிப்பாக நோய் தொற்று, உயிரிழப்பு, வைரஸ் பாதிப்பு உச்சத்தை தொடுவது ஆகியவை ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு மாதிரியாக இருக்கும். மகாராஷ்டிரா, குஜராத், மத்திய பிரதேசம், மேற்குவங்கத்தில் வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. இனி வரும் காலங்களில் இதர மாநிலங்களில் வைரஸ் பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது கரோனா வைரஸ் பரவல்தடுப்பு நடவடிக்கைகளை இந்தியாதிறம்பட மேற்கொண்டு வருகிறது. எனினும், இந்த வைரஸை கட்டுப்படுத்த கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தவில்லை என்றால்நாம் பின்னடைவை சந்திக்கநேரிடும். கேரளாவில் வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. அந்த மாநிலத்திலும்கூட தற்போது வைரஸ் பரவல் அதிகரிக்கிறது.

நாடு முழுவதும் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மாவட்ட அளவில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். சில மாவட்டங்களில் வைரஸ் பாதிப்பு இல்லாமல் இருக்கும். ஆனால் திடீரென அந்த மாவட்டங்கள் வைரஸ் தொற்று மையங்களாக மாறிவிடும். உதாரணமாக, கர்நாடகாவில் தாவணகரே, சித்ராதுர்கா மாவட்டங்களில் வைரஸ் தொற்றேஇல்லாமல் இருந்தது. தற்போது அந்த மாவட்டங்களிலும் வைரஸ் வேகமாக பரவி வருகிறது.

போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாமுக்காக மாவட்ட அளவில் 3 மாதங்களுக்கு முன்பாகவே பணிகள் தொடங்கிவிடும். இதேபோல கரோனா வைரஸ் பரவலை தடுக்க மாவட்ட அளவில்குழுக்களை நியமித்து கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை இந்தியா திறம்பட மேற்கொண்டு வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

மேலும்