உலகம் முழுவதும் தொற்றுநோயை பரப்பி வரும் சீனா மீதுவழக்கு தொடர வசதியாக, சட்டத்தில் உரிய திருத்தம் கொண்டு வர வேண்டும் என அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் மத்திய அரசை வலியுறுத்தி உள்ளது.
இதுகுறித்து அந்த சங்கத்தின் தலைவர் ஆதிஷ் அகர்வாலா, பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
சீன அரசின் உத்தரவின் பேரில் அந்த நாட்டின் ஆய்வகங்களில் உருவாக்கப்பட்டதுதான் கரோனாவைரஸ். சீனாவின் நாசகர திட்டத்தின்படி இந்த வைரஸ் உலகம் முழுவதும் பரப்பப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் கிருமி தொற்று காரணமாக இந்தியாவின் பொருளாதாரம் முற்றிலும் முடங்கிவிட்டது. இதுவரை சுமார் 3,000 பேர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இப்போது சிவில் நடைமுறை சட்டம் (சிபிசி ) 86-வது பிரிவின்படி வெளிநாடு ஒன்றின் மீது வழக்கு தொடுக்க பொதுமக்களுக்கு அதிகாரம் இல்லை.
எனவே இந்தப் பிரிவில் திருத்தம் செய்தால் கரோனா வைரஸ் கிருமி தொற்றுகாரணமாக ஏற்பட்ட இழப்புகளுக்கு ஈட்டுத்தொகை கோரி சீனா மீது பொது மக்கள் வழக்கு தொடர முடியும். எனவே, சிபிசி86-வது பிரிவில் திருத்தம்கொண்டுவர அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த கடிதத்தில் ஆதிஷ் அகர்வாலா கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago