மத்திய உணவுப் பொருள் விநியோகத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் காணொலி காட்சி மூலம் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
உத்தரபிரதேசம், பிஹாரில் 86.45 லட்சம், மகாராஷ்டிராவில் 70 லட்சம், மேற்கு வங்கத்தில் 60.1 லட்சம், மத்திய பிரதேசத்தில் 54.64 லட்சம், ராஜஸ்தானில் 44.66 லட்சம்,கர்நாடகாவில் 40.19 லட்சம், குஜராத்தில் 38.25 லட்சம், தமிழகத்தில் 35.73 லட்சம், ஜார்க்கண்டில் 26.37 லட்சம், ஆந்திராவில் 26.82 லட்சம், அசாமில் 25.15 லட்சம் எனநாடு முழுவதும் 8 கோடி புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உள்ளனர்.
கரோனா பிரச்சினை காரணமாக அவர்களுக்கு உணவு கிடைக்காத நிலை உள்ளது. இதில் ஏராளமானோர் சொந்த ஊருக்குநடைபயணமாக திரும்பி வருகின்றனர். எனவே அவர்களுக்குத் தேவையான உணவு தானியங்களை அடுத்த 15 நாட்களுக்குள் மாநில அரசுகள் இலவசமாக வழங்க வேண்டும். டெல்லியில்உள்ள 7.27 லட்சம் தொழிலாளர்களுக்கு மே, ஜூன் மாதத்தில் ஒருவருக்கு 5 கிலோ உணவு தானியம் வழங்கப்படும்.
மாநில அரசுகளின் உணவு தானிய கையிருப்பு குறைந்தால், கூடுதல் உணவு தானியங்களை மத்திய அரசு வழங்கும். கடந்த 2 மாதங்களாக ரேஷன் கார்டு வைத்துள்ள அனைவருக்கும் உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.புலம்பெயர் தொழிலாளர்களிடம் ரேஷன் கார்டுகள் இல்லாவிட்டாலும் அவர்களுக்கு தங்கு தடையின்றி ரேஷன் பொருட்கள் கிடைக்க மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.- பிடிஐ
முக்கிய செய்திகள்
இந்தியா
11 mins ago
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago