ஊரடங்கு காரணமாக, 13.5 கோடி பேரின் வேலை பறிபோகும் என்றும் 12 கோடி பேர் வறுமையில் சிக்குவார்கள் என்றும் சர்வதேச மேலாண்மை ஆலோசனை நிறுவனம் ஆர்தர் டி லிட்டில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'இந்தியா: கரோனா வைரஸ் பாதிப்பு உருவாக்கும் பொருளாதார சவால்களை சமாளித்தல்' என்ற தலைப்பில் அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் உள்ள முக்கிய விவரம் வருமாறு:
கரோனா வைரஸால் அமலாகி உள்ள ஊரடங்கால், இந்தியாவுக்கு 1 லட்சம் கோடி டாலர் வாய்ப்பை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதன் 5 லட்சம் கோடி டாலர் பொருளாதார தொலைநோக்கு திட்டத்துக்கு இப்போது புரட்சிகர பொருளாதார அணுகுமுறை தேவைப்படுகிறது. உடனடி ஊக்குவிப்பு சலுகைகள், அமைப்பு ரீதியிலான சீர்திருத்தங்களை மையமாக வைத்து இதை அணுக வேண்டும்.
இதற்கு நல்ல தொடக்கமாக அமைந்துள்ளது பிரதமர் மோடி அறிவித்துள்ள சுயசார்பு கொள்கை. கரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் தனி நபர் வருவாய் குறையும். 13.5 கோடி வேலை இழப்பு ஏற்படும். 12 கோடி பேர் வறுமையில் சிக்குவார்கள். ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி விகிதம் சரியும். எனவே நலிவுற்ற பிரிவினருக்கும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கும் பாதுகாப்பு தரும் நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
37 mins ago
இந்தியா
57 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago