கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த கொண்டுவரப்பட்ட ஊரடங்கில் வந்த 3-ம் கட்டம் இன்றுடன் முடிகிறது, அடுத்து என்ன செய்யப்போகிறது மத்திய அரசு என காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்
கரோனா ைவரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் கடந்த மார்ச் 25-ம் தேதி முதல்கட்ட ஊரடங்கை மத்திய அரசு அறிவித்தது. ஆனால் கரோனாவின் பாதிப்பு குறையாததையடுத்து, லாக்டவுன் அடுத்த இரு கட்டங்களுக்கு நீட்டிக்கப்பட்டது. தற்போது மூன்றாவது லாக்டவுன் மே 3-ம் ேததி முதல் 17-ம் தேதிவரை அமலில் இருக்கிறது. இந்த 3-வது லாக்டவுன் இன்றுடன் முடிகிறது.
4-வது கட்டலாக்டவுன் இருக்கிறது என பிரதமர் மோடி சூசகமாதத் தெரிவித்து, மற்ற 3 லாக்டவுன் போல் இல்லாமல் வித்தியாசமாக இருக்கும் எனத் தெரிவித்தார். அதேசமயம், லாக்டவுனை நாடுமுழுவதும் தளர்த்துவதற்கு என்ன திட்டத்தை மத்தியஅரசு வைத்துள்ளது என்று காங்கிரஸ் கட்சி தொடந்து கேள்வி எழுப்பி வருகிறது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் , ராகுல் காந்தி உள்ளி்ட்ட தலைவர்களும் லாக்டவுனை நீக்கும் தி்ட்டம் குறித்து மத்திய அரசு விளக்க வேண்டும் என விலியுறுத்தியுள்ளனர்.
இந்த சூழலில் 3-வது லாக்டவுன் இன்று முடியும் நிலையில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். அதில் அவர் கூறுகையில் “கரோனா தொற்று பரவுவதை பாஜக அரசால் தடுக்க முடியாது. காரணம், அரசின் நிர்வாக இயந்திரம் பழுதடைந்து கிடக்கிறது, இதைச் செய்யக் கூடிய உள்ளாட்சி அமைப்புகள் பல மாநிலங்களில் கிடையாது அல்லது அதிகாரம் இல்லாமல் இருக்கின்றன. கரோனா வைரஸைத் தடுக்க கொண்டுவரப்பபட்ட 3-வது கட்ட ஊரடங்கு இன்றுடன் முடிவடைகிறது. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?
கரோனா தொற்று நேற்று 4 ஆயிரத்து 675 பேருக்குப் பரவியது. தற்காப்பு நடவடிக்கைகளை ஒவ்வொரு மனிதரும் மேற்கொண்டு தொற்றுலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதே ஒரே வழி” எனத் தெரிவித்துள்ளார்
முக்கிய செய்திகள்
இந்தியா
54 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago