கரோனா வைராஸ் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 24 மணிநேரத்தில் ஏறக்குறைய 5 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 120 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது
கரோனா வைரஸால் இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 4 ஆயிரத்து 987 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 90 ஆயிரத்து 927 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 34 ஆயிரத்து 109 ஆகவும், மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 53 ஆயிரத்து 946 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் கரோனா வைரஸ் பாதிப்பால் 120 பேர் உயிரிழந்ததையடுத்து, ஒட்டுமொத்த பலியானவர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்து 872 ஆக அதிகரித்துள்ளது.
» லாக்டவுன் வரும் 31-ம் தேதிவரை நீட்டிப்பு;கட்டுப்பாடுகள் தொடரும்: பஞ்சாப் அரசு அறிவிப்பு
கடந்த இரு நாட்களாக தமிழகத்தில் கரோன பாதிப்பு குறைந்து வந்ததையடுத்து, பாதிக்கப்பட்ட மாநிலங்கள் பட்டியலில் 3-ம் இடதுக்கு தமிழகம் சென்றது, குஜராத் 2-ம் இடத்தைப் பிடித்தது.
24 மணிநேரத்தில் நிகழ்ந்த உயிரிழப்புகளில் மகாராஷ்டிராவில் 67 பேர், குஜராத்தில் 19 பேர், உத்தரப்பிரதேசத்தில் 9 பேர், மேற்கு வங்கத்தில் 7 ேபர், டெல்லியில் 6 பேர், மத்தியப்பிரதேசத்தில் 4 பேர்,தமிழகத்தில் 3 பேர், ஹரியாணாவில் இருவர், ஆந்திரா, ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான் மாநிலத்தில் தலா ஒருவர் பலியாகியுள்ளனர்
கரோனாவிலிருந்து குணமடைந்துவருவோர் சதவீதம் 37.51 ஆக இருக்கிறது என மத்திய சுகாதாராத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இன்று காலை 9 மணி நிலவரப்படி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:
''மகாராஷ்டிர மாநிலத்தில் பலியானோர் எண்ணிக்கை 1,135 ஆக அதிகரித்துள்ளது. அடுத்த இடத்தில் உள்ள குஜராத்தில் உயிரிழப்பு 625 ஆகவும், மத்தியப் பிரதேசத்தில் உயிரிழப்பு 243 ஆக அதிகரித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் பலி எண்ணிக்கை 232 ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் உயிரிழப்பு 129 ஆகவும், ராஜஸ்தானில் பலி எண்ணிக்கை 126 ஆகவும் அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் பலி எண்ணிக்கை 74 ஆக அதிகரித்துள்ளது. தெலங்கானாவில் பலி எண்ணிக்கை 34 ஆகவும், உத்தரப் பிரதேசத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 104 ஆகவும், ஆந்திராவில் 49 ஆகவும் இருக்கிறது. கர்நாடகாவில் 36 பேரும், பஞ்சாப்பில் தலா 32 பேரும் பலியாகியுள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் 12 ேபரும், ஹரியாணாவில் தலா 13 பேரும், பிஹாரில் 7 பேரும், கேரளாவில் 4 பேரும், ஜார்க்கண்ட், ஒடிசாவில் தலா 3 பேரும் உயிரிழந்துள்ளனர். இமாச்சலப் பிரதேசத்தில் 3 பேரும், அசாம், மேகாலயா ஆகிய மாநிலங்களில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 30,706 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 7,088 ஆக உயர்ந்துள்ளது.
அதைத் தொடர்ந்து 2-வது இடத்தில் உள்ள குஜராத்தில் 10,988 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 4,308 பேர் குணமடைந்தனர். 2-வது இடத்தில் இருந்த தமிழகத்தில் கடந்த இருநாட்களாக பாதிக்கப்பட்டோர் குறைந்ததால் 3-ம் இடத்துக்கு சரி்ந்தது. குஜராத் 2-ம் இடத்துக்கு நகர்ந்தது.
3-ம் இடத்தில் உள்ளதமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10ஆயிரத்து 585ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 3,538 ஆகவும் அதிகரித்துள்ளது.
4-வது இடத்தில்உள்ள 9,333 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,926 பேர் குணமடைந்துள்ளனர். ராஜஸ்தானில் 4,960 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 4,789 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 4,258 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேற்கு வங்கத்தில் 2,576 பேரும், ஆந்திராவி்ல் 2,355 பேரும், பஞ்சாபில் 1,946 பேரும், தெலங்கானாவில் 1,509 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் 1,121 பேர், கர்நாடகாவில் 1,092 பேர், ஹரியாணாவில் 887 பேர், பிஹாரில் 1,179 பேர், கேரளாவில் 587 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். 495 பேர் குணமடைந்துள்ளனர்.ஒடிசாவில் 737 பேர், சண்டிகரில் 191 , ஜார்க்கண்டில் 217 பேர், திரிபுராவில் 167 பேர், அசாமில் 92 பேர், உத்தரகாண்டில் 88 பேர், சத்தீஸ்கர் 67 பேர், இமாச்சலப் பிரதேசத்தில் 78 பேர், லடாக்கில் 43 பேர், மேகாலயாவில் 13 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரியில் 13 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் புதுச்சேரியில் 9 பேர் குணமடைந்தனர்.
மணிப்பூர், மிசோரம், அருணாச்சலப் பிரதேசம், அந்தமான் நிகோபர் தீவு, கோவாவில் பாதிக்கப்பட்டோர் யாருமில்லை''.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது
முக்கிய செய்திகள்
இந்தியா
59 mins ago
இந்தியா
3 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago