கரோனா வைரஸ் தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மத்திய பிரதேசமும் ஒன்று. அங்குள்ள பிந்த் மாவட்டத்தில் நேற்று முன்தினம் டெல்லியிலிருந்து சொந்த ஊர் திரும்பிய ஒருவருக்குகரோனா வைரஸ் தொற்றுசோதனை நடத்த வற்புறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் இரு பிரிவினரிடையே ஏற்பட்டமோதலில் பெண் உட்பட 2 பேர்உயிரிழந்தனர். 3 பேர் காயம் அடைந்தனர்,
இது தொடர்பாக காவல் துறைஅதிகாரிகள் கூறும்போது, "டெல்லியிலிருந்து திரும்பி வந்த நபருக்கு கட்டாயம் வைரஸ் பரிசோதனை நடத்த வேண்டும் என ஒரு தரப்பு கண்டிப்புடன் கூறியது. ஆனால் அதற்கு மறுத்த அந்த நபர் தனக்கு ஏற்கெனவே கரோனா சோதனை நடத்தப்பட்டுவிட்டதாக கூறியுள்ளார். ஆனால் இதை ஏற்க மறுத்த அந்த நபருக்கு ஆதரவான பிரிவினருக்கும் மற்றவர்களுக்கும் இடையே வாக்குவாதம் முற்றி வன்முறையாக மாறியது.
இதையடுத்து, போலீஸார் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்" என்றார்.
மத்தியபிரதேசத்தில் 4,595 கரோனா வைரஸ் நோயாளிகள் உள்ளனர், 239 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
இரு தினங்களுக்கு முன்னர் மகாராஷ்டிர எல்லையையொட்டியுள்ள சேந்த்வா நகர் பகுதியில் புலம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், அரசு தங்களுக்கு உணவு, போக்குவரத்து வசதிகளை செய்து தரவில்லை என புகார் கூறி வன்முறையில் ஈடுபட்டனர். போலீஸார் மீதும் அவர்கள் கல்வீச்சில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த மாத தொடக்கத்தில் பர்வானி மாவட்டம் சீல் வைக்கப்பட்டதைக் கண்டித்து புலம்பெயர் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். உத்தரபிரதேசத்தில் உள்ள தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல இந்த மாவட்டம் வழியாக தங்களை அனுமதிக்க வேண்டும் என்று அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago