கரோனா பாதிப்பில் சீனாவை முந்தியது இந்தியா: 24 மணிநேரத்தில் ஏறக்குறைய 4ஆயிரம் பேர் பாதிப்பு; 103 பேர் உயிரிழப்பு: 11-வது இடத்தில் இந்தியா

By பிடிஐ


கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையில் சீனாவை முந்திவிட்டது இந்தியா. கடந்த 24மணி நேரத்தில் 3 ஆயிரத்து970 பேருக்கு பாஸிட்டிவ் எனக் கண்டறியப்பட்டுள்ளது, 103 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

கரோனா வைரஸ் உருவாகிய சீனாவில் அந்த வைரஸால் இதுவரை 82 ஆயிரத்து 933 பேர்தான் பாதிக்கப்பட்டனர். ஆனால் நேற்று ஒரே நாளில் ஏறக்குறைய 4 ஆயிரம் பேர் இந்தியாவில் பாதிக்கப்பட்டதையடுத்து,இந்தியாவில் கரோனா பாதிப்பு 85 ஆயிரத்து 940 ஆக அதிகரித்துள்ளது.

உலகளவில் கரோனாவில் அதிகளவு பாதிக்கப்பட்ட நோயாளிகள் இருக்கும் நாடுகள் பட்டியலில் இந்தியா 11-வது இடத்துக்கு முன்னோக்கி நகர்ந்துள்ளது. இந்தியாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதிப்புகள் இருக்கும் மாநிலங்கள் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கரோனாவிலிருந்து குணமடைந்து சென்றோர் எண்ணிக்ைக 30 ஆயிரத்து 153 ஆகவும், மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை53 ஆயிரத்து 35 ஆகவும் இருக்கிறது. உயிரிழப்புகளைப் பொறுத்தவரை இதுவரை 2 ஆயிரத்து 752 பேர் கரோனாவால் பலியாகியுள்ளனர்

கரோனாவிலிருந்து குணமடைந்துவருவோர் சதவீதம் 35.08 ஆக இருக்கிறது என மத்திய சுகாதாராத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் நிகழ்ந்த 103 உயிரிழப்புகளில் மகாராஷ்டிராவில் 49 பேர், குஜராத்தில் 20 பேர், மேற்கு வங்கத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். டெல்லியில் 8 பேர், உத்தரப்பிரதேசத்தில் 7 பேர், தமிழகத்தில் 5 பேர், மத்தியப்பிரதேசத்தில் இருவர், கர்நாடகா, இமாச்சலப்பிரதேசத்தில் தலா ஒருவர் உயிரிழந்தனர்

இன்று காலை 9 மணி நிலவரப்படி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

''மகாராஷ்டிர மாநிலத்தில் பலியானோர் எண்ணிக்கை 1,068 ஆக அதிகரித்துள்ளது. அடுத்த இடத்தில் உள்ள குஜராத்தில் உயிரிழப்பு 606 ஆகவும், மத்தியப் பிரதேசத்தில் உயிரிழப்பு 239 ஆக அதிகரித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் பலி எண்ணிக்கை 225 ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் உயிரிழப்பு 123 ஆகவும், ராஜஸ்தானில் பலி எண்ணிக்கை 125 ஆகவும் அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் பலி எண்ணிக்கை 71ஆக அதிகரித்துள்ளது. தெலங்கானாவில் பலி எண்ணிக்கை 34 ஆகவும், உத்தரப் பிரதேசத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 95 ஆகவும், ஆந்திராவில் 48 ஆகவும் இருக்கிறது. கர்நாடகாவில் 36 பேரும், பஞ்சாப்பில் தலா 32 பேரும் பலியாகியுள்ளனர்.

ஜம்மு காஷ்மீர், ஹரியாணாவில் தலா 11 பேரும், பிஹாரில் 7 பேரும், கேரளாவில் 4 பேரும், ஜார்க்கண்ட், ஒடிசாவில் தலா 3 பேரும் உயிரிழந்துள்ளனர். இமாச்சலப் பிரதேசத்தில் 3 பேரும், அசாம், மேகாலயா ஆகிய மாநிலங்களில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 29,100 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 6,524 ஆக உயர்ந்துள்ளது.

அதைத் தொடர்ந்து 2-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10ஆயிரத்து 108ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 2,599 ஆகவும் அதிகரித்துள்ளது.

மூன்றாவது இடத்தில் உள்ள குஜராத்தில் 9,931 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 4,035 பேர் குணமடைந்துள்ளனர். 4-வது இடத்தில்உள்ள டெல்லியில் 8,895 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,518 பேர் குணமடைந்துள்ளனர்.
ராஜஸ்தானில் 4,727 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 4,595 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 4,057 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேற்கு வங்கத்தில் 2,461 பேரும், ஆந்திராவி்ல் 2,307 பேரும், பஞ்சாபில் 1,935 பேரும், தெலங்கானாவில் 1,454 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் 1,013 பேர், கர்நாடகாவில் 1,056 பேர், ஹரியாணாவில் 818 பேர், பிஹாரில் 1,018 பேர், கேரளாவில் 576 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். 492 பேர் குணமடைந்துள்ளனர்.

ஒடிசாவில் 672 பேர், சண்டிகரில் 191 , ஜார்க்கண்டில் 203 பேர், திரிபுராவில் 156 பேர், அசாமில் 90 பேர், உத்தரகாண்டில் 82 பேர், சத்தீஸ்கர் 66 பேர், இமாச்சலப் பிரதேசத்தில் 76 பேர், லடாக்கில் 43 பேர், மேகாலயாவில் 13 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரியில் 13 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் புதுச்சேரியில் 9 பேர் குணமடைந்தனர்.

மணிப்பூர், மிசோரம், அருணாச்சலப் பிரதேசம், அந்தமான் நிகோபர் தீவு, கோவாவில் பாதிக்கப்பட்டோர் யாருமில்லை''.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்