கரோனா பரவலை தடுப்பதில் இந்தியா முன்மாதிரியாக உள்ளது- பிரதமர் மோடிக்கு பில்கேட்ஸ் புகழாரம்

By செய்திப்பிரிவு

அமெரிக்காவை சேர்ந்த மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் நேற்று முன்தினம் கலந்துரையாடினார். அப்போது கரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடிப்பது, வைரஸ் பரவலை தடுப்பது குறித்து இருவரும்விரிவான ஆலோசனை நடத்தினர்.

இதுதொடர்பாக பிரதமர் மோடிட்விட்டரில் வெளியிட்ட பதிவில், "கேட்ஸ் அறக்கட்டளையின் வைரஸ் தடுப்பு பணிகள், வைரஸுக்கான மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி, தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது குறித்து பில்கேட்ஸுடன் ஆலோசனை நடத்தினேன்" என்று தெரிவித்துள்ளார்.

பில்கேட்ஸ் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், "கரோனா வைரஸ்பரவலை தடுக்கவும் பொருளாதார சரிவை தடுக்கவும் உலக நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. வைரஸ் பரவலை தடுப்பதில் இந்தியா முன்மாதிரியாக செயல்பட்டு வருகிறது. வைரஸை கட்டுப்படுத்த ஒட்டுமொத்த உலக நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். பிரதமர்நரேந்திர மோடியின் பங்களிப்புக்காக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

45 mins ago

இந்தியா

51 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

12 hours ago

மேலும்