கரோனா வைரஸை எதிர்த்துப் போராட இந்தியாவுக்கு உலக வங்கி 1 பில்லியன் டாலர் அளிக்க ஒப்புதல்

By பிடிஐ

கரோனா காலத்தில் கஷ்டப்படும் ஏழைகள் மற்றும் நலிவுற்றோர் வீடுகளுக்கு உதவிகரமாக ’இந்தியாவின் சமூகப் பாதுகாப்பு முடுக்குதல் திட்டம்’ என்ற திட்டத்தின் கீழ் உலக வங்கி 1 பில்லியன் டாலர்கள் அதாவது 100 கோடி டாலர்கள் அளிக்க ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதன் மூலம் இந்திய கோவிட்-19 வைரஸ் தாக்குதலுக்கான நிதியுதவி உலகவங்கியின் மூலம் 2 பில்லியன் டாலர்களாகும்.

கரோனா பலி எண்ணிக்கை 3 லட்சத்தையும் கடந்து விட்டது, பாதிப்பு எண்ணிக்கை 45,41,184 ஆக அதிகரித்துள்ளது, உலகம் முழுதும் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பொருளாதாரம் லாக் டவுன் உள்ளிட்ட நடவடிக்கைகளினால் முடங்கியுள்ளது.

குறிப்பாக அமைப்புசாரா தொழிற்துறைகளில் பெரிய அளவில் வேலையிழப்பும் பிற பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளது, லாக்டவுனில் உள்ள மிகப்பெரிய பொருளாதாரங்களின் இந்த நிலைக்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல.

1 பில்லியன் டாலரில் 550 மில்லியன் டாலர்கள் தொகை பன்னட்டு வளர்ச்சி கூட்டமைப்பு கடனாக வழங்குகிறது. 200 மில்லியன் டாலர்கள் மறுகட்டுமானம் மற்றும் வளர்ச்சிக்கான பன்னட்டு வங்கி அளிக்கும் கடன் ஆகும். கடனை திருப்பிச் செலுத்தும் காலம் 18.5 ஆண்டுகள் ஆகும், கூடுதல் சலுகை காலம் 5 ஆண்டுகள் வழங்கப்படுகிறது.

மீதமுள்ள 250 மிலியன் டாலர்கள் ஜூன்30ம் 2020-க்குப் பிறகு கிடைக்கப் பெறும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்