கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் நடவடிக்கையாக வழக்கறிஞர்கள் இனி வெண்ணிற ஆடைகளில் வழக்காடலாம் என ஒடிசா உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
கோவிட்-19 பாதிப்புகளுக்கு மத்தியில், கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒடிசா உயர் நீதிமன்றம் ஒரு புதிய ஆடைக் குறியீட்டை அறிமுகப்படுத்தும் ஒரு சுற்றறிக்கையை வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளது.
கரோனா வைரஸ் பரவல் நாட்டில் அதிகரித்து வரும் நிலையில் தற்போது ஆடைகளின் நிறங்கள், தன்மைகள் கூட வைரஸைப் பரப்பும் என உச்ச நீதிமன்றம் அச்சம் தெரிவித்தது. உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனைக்கு இணங்க ஒடிசா உயர் நீதிமன்றம் தனது வழக்கு விசாரணைகளுக்காக வாதிடும் வழக்கறிஞர்கள் இனி அணிய வேண்டிய ஆடைகள் குறித்து உத்தரவு ஒன்றை இன்று பிறப்பித்துள்ளது.
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே, பொதுநல மனு ஒன்றைக் காணொலி வாயிலாக புதன்கிழமை விசாரித்தார். அப்போது, “நீதிபதிகளும், வழக்கறிஞர்களும் கருப்புநிற கோட், மேலங்கியைத் தவிர்ப்பது நல்லது. இந்த வகை கருப்புநிற ஆடைகள், வைரஸ் கிருமிகளை எளிதில் கவரும் என்று தெரியவந்துள்ளது. இனி நீதிபதிகள், வழக்கறிஞர்கள் எந்த நிற ஆடைகளை அணிய வேண்டும் என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும்” என்று தெரிவித்திருந்தார்.
» தமிழகத்தில் கல்லூரிகள் எப்போது திறக்கப்படும்?- அமைச்சர் அன்பழகன் விளக்கம்
» தூத்துக்குடியில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த இளைஞர் உயிரிழப்பு
இதன் அடிப்படையில் ஒடிசா உயர் நீதிமன்றம் வெளியிட்டுள்ள ஆடைக்குறியீடு பற்றி கூறியுள்ளதாவது:
''கரோனா வைரஸ் தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு, நிலவும் சூழ்நிலையில், ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வழக்கறிஞர்கள் அணிந்துவரும் ஆடைகளில் மாற்றம் செய்ய அறிவுறுத்தப்படுகிறது.
ஒடிசா உயர் நீதிமன்றத்தில் காணொலிக் காட்சி வாயிலாக ஆஜராகும் வழக்கறிஞர்கள், கருப்பு கோட் மற்றும் கவுன் அணியத் தேவையில்லை, மருத்துவத் தேவைகள் இருக்கும் வரை அல்லது மேலதிக உத்தரவுகள் வரும் வரை வெற்று வெள்ளை சட்டை / வெள்ளை சல்வார் கமீஸ் / வெள்ளை சேலை வெற்று வெள்ளை கழுத்துப் பட்டை அணியுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்''.
இவ்வாறு ஒடிசா உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago