கரோனா பாதிப்பு 82 ஆயிரத்தை நெருங்குகிறது: 24 மணிநேரத்தில் ஏறக்குறைய 4 ஆயிரம் பேர் பாதிப்பு; மகாராஷ்டிராவில் ஆயிரத்தை கடந்த உயிரிழப்பு: 2-ம் இடத்தில் தமிழகம்

By பிடிஐ

இந்தியாவில் கரோனாவைக் கட்டுப்படுத்த லாக்டவுன் விதிக்கப்பட்டிருந்தும் அதன் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் ஏறக்குறைய 4 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 100 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 3 ஆயிரத்து 967 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 81 ஆயிரத்து 970 ஆக அதிகரித்துள்ளது. 27ஆயிரத்து 920 பேர் குணமடைந்துள்ளனர், 51 ஆயிரத்து 401 பேர் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகின்றனர்.

உயிரிழப்பைப் பொறுத்தவரை கடந்த 24 மணிநேரத்தில் 100 பேர் உயிரிழந்துள்ளனர், இதன் மூலம் ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 2 ஆயிரத்து 649ஆக அதிகரித்துள்ளது.

நாட்டிலேயே அதிகஅளவு கரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலத்தில் மகாராஷ்டிரா முதலிடத்திலும், 2-ம் இடத்தில் இருந்த குஜராத்தை பின்னுக்குத் தள்ளி தமிழகம் 2-வது இடத்தையும் பிடித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரத்தின்படி கரோனாவால் குணமடைந்துவருபவர்கள் சதவீதம் 34.06 சதவீதமாக அதிகரித்துள்ளது. வியாழக்கிழமை காலை முதல் இதுவரை 100 உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. இதில் மகாராஷ்டிராவில் 44 பேர், குஜராத்தில் 20 பேர், டெல்லியில் 9 பேர், மேற்கு வங்கத்தில் 8 பேர், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசத்தில் தலா 5 பேர், ராஜஸ்தானில் 4 பேர், தமிழகம், கர்நாடகா, ஆந்திராவில் தலா 2 பேர் உயிரிழந்துள்ளனர்

இன்று காலை 9 மணி நிலவரப்படி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

''மகாராஷ்டிர மாநிலத்தில் பலியானோர் எண்ணிக்கை 1,019 ஆக அதிகரித்துள்ளது. அடுத்த இடத்தில் உள்ள குஜராத்தில் உயிரிழப்பு 586 ஆகவும், மத்தியப் பிரதேசத்தில் உயிரிழப்பு 237 ஆக அதிகரித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் பலி எண்ணிக்கை 215 ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் உயிரிழப்பு 115 ஆகவும், ராஜஸ்தானில் பலி எண்ணிக்கை 125 ஆகவும் அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் பலி எண்ணிக்கை 66 ஆக அதிகரித்துள்ளது. தெலங்கானாவில் பலி எண்ணிக்கை 34 ஆகவும், உத்தரப் பிரதேசத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 88 ஆகவும், ஆந்திராவில் 48 ஆகவும் இருக்கிறது. கர்நாடகாவில் 35 பேரும், பஞ்சாப்பில் தலா 32 பேரும் பலியாகியுள்ளனர்.

ஜம்மு காஷ்மீர், ஹரியாணாவில் தலா 11 பேரும், பிஹாரில் 7 பேரும், கேரளாவில் 4 பேரும், ஜார்க்கண்ட், ஒடிசாவில் தலா 3 பேரும் உயிரிழந்துள்ளனர். இமாச்சலப் பிரதேசத்தில் 2 பேரும், அசாம், மேகாலயா ஆகிய மாநிலங்களில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 27,524 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 6,059 ஆக உயர்ந்துள்ளது.

அதைத் தொடர்ந்து 2-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 9ஆயிரத்து 964 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 2,240 ஆகவும் அதிகரித்துள்ளது.

மூன்றாவது இடத்தில் உள்ள குஜராத்தில் 9,591 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 3,753 பேர் குணமடைந்துள்ளனர். 4-வது இடத்தில்உள்ள டெல்லியில் 8,470 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,045 பேர் குணமடைந்துள்ளனர்.
ராஜஸ்தானில் 4,534 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 4,426 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 3,902 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேற்கு வங்கத்தில் 2,377பேரும், ஆந்திராவி்ல் 2,205 பேரும், பஞ்சாபில் 1,935 பேரும், தெலங்கானாவில் 1,414 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் 983 பேர், கர்நாடகாவில் 987 பேர், ஹரியாணாவில் 818 பேர், பிஹாரில் 994 பேர், கேரளாவில் 560 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். 491 பேர் குணமடைந்துள்ளனர்.

ஒடிசாவில் 611 பேர், சண்டிகரில் 191 , ஜார்க்கண்டில் 197 பேர், திரிபுராவில் 156 பேர், அசாமில் 87 பேர், உத்தரகாண்டில் 78 பேர், சத்தீஸ்கர் 60 பேர், இமாச்சலப் பிரதேசத்தில் 74 பேர், லடாக்கில் 43 பேர், மேகாலயாவில் 13 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரியில் 13 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் புதுச்சேரியில் 9 பேர் குணமடைந்தனர்.

மணிப்பூர், மிசோரம், அருணாச்சலப் பிரதேசம், அந்தமான் நிகோபர் தீவு, கோவாவில் பாதிக்கப்பட்டோர் யாருமில்லை''.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

மேலும்