வரும் 17-ம் தேதியுடன் தேசிய ஊரடங்கு முடிவுக்கு வருவதால், விதிமுறைகளை தளர்த்துவது குறித்து அந்தந்த மாநில அரசுகள் முடிவெடுக்கலாம் என மத்திய அரசு கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து, கர்நாடக முதல்வர் எடியூரப்பா, அமைச்சர்கள், தொழில் நிறுவனங்களின் நிர்வாக அதிகாரிகள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.
இதுகுறித்து சுற்றுலாத்துறை அமைச்சர் சி.டி.ரவி கூறுகையில், "கரோனா பாதிப்பின் காரணமாக சுற்றுலாத் துறைக்கு கடும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மூடப்பட்டுள்ள தனியார் விடுதிகள்,கேளிக்கை விடுதிகள், உணவகங்கள், உடற்பயிற்சி மையங்கள், கோல்ப் மைதானம் உள்ளிட்டவற்றை மீண்டும் திறக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தேன். அதனை உடனடியாக பரிசீலித்து விரைவில் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்" என்றார்.
இதனிடையே வரும் 18-ம் தேதிமுதல் குறைந்த எண்ணிக்கையில் அரசு பேருந்துகளை இயக்கவும் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முக கவசம்,தனிநபர் இடைவெளி உள்ளிட்டவற்றுடன் 30 பேர் மட்டுமே பயணிக்கவேண்டும் என போக்குவரத்துத்துறை முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
முக்கிய செய்திகள்
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago