இந்தியாவில் கரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் 3 ஆயிரத்து 722 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 134 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
கரோனாவால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 78 ஆயிரத்து 3 ஆக அதிகரித்துள்ளது. இதில் 26 ஆயிரத்து 235 பேர் குணமடைந்த நிலையில் 49 ஆயிரத்து 219 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழப்பைப் பொறுத்தவரை 2 ஆயிரத்து 549 ஆக அதிகரித்துள்ளது.
இன்று காலை 9 மணி நிலவரப்படி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:
''மகாராஷ்டிர மாநிலத்தில் பலியானோர் எண்ணிக்கை 975 ஆக அதிகரித்துள்ளது. அடுத்த இடத்தில் உள்ள குஜராத்தில் உயிரிழப்பு 566 ஆகவும், மத்தியப் பிரதேசத்தில் உயிரிழப்பு 232 ஆக அதிகரித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் பலி எண்ணிக்கை 207 ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் உயிரிழப்பு 106 ஆகவும், ராஜஸ்தானில் பலி எண்ணிக்கை 121 ஆகவும் அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் பலி எண்ணிக்கை 64 ஆக அதிகரித்துள்ளது. தெலங்கானாவில் பலி எண்ணிக்கை 34 ஆகவும், உத்தரப் பிரதேசத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 83 ஆகவும், ஆந்திராவில் 47 ஆகவும் இருக்கிறது. கர்நாடகாவில் 33 பேரும், பஞ்சாப்பில் தலா 32 பேரும் பலியாகியுள்ளனர்.
ஜம்மு காஷ்மீர், ஹரியாணாவில் தலா 11 பேரும், பிஹாரில் 7 பேரும், கேரளாவில் 4 பேரும், ஜார்க்கண்ட், ஒடிசாவில் தலா 3 பேரும் உயிரிழந்துள்ளனர். இமாச்சலப் பிரதேசத்தில் 2 பேரும், அசாம், மேகாலயா ஆகிய மாநிலங்களில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,922 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 5,547 ஆக உயர்ந்துள்ளது.
அதைத் தொடர்ந்து குஜராத்தில் 9,267 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 9,227 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் தமிழகத்தில் 2,176 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்துக்கும் குஜராத் மாநிலத்துக்கும் பாதிப்பு எண்ணிக்கையில் ஏறக்குறைய 40 வித்தியாசம் இருந்து வருகிறது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பாதிப்பு அதிகரித்து வருவதால் வரும் நாட்களில் குஜராத்தைப் பின்னுக்குத் தள்ளி 2-ம் இடத்தைப் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லியில் 7,998 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,858 பேர் குணமடைந்துள்ளனர். ராஜஸ்தானில் 4,328 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 4,173 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 3,729 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேற்கு வங்கத்தில் 2,290 பேரும், ஆந்திராவி்ல் 2,137 பேரும், பஞ்சாப்பில் 1,924 பேரும், தெலங்கானாவில் 1,367 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் 971 பேர், கர்நாடகாவில் 959 பேர், ஹரியாணாவில் 793 பேர், பிஹாரில் 940 பேர், கேரளாவில் 534 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். 490 பேர் குணமடைந்துள்ளனர்.
ஒடிசாவில் 538 பேர், சண்டிகரில் 187 , ஜார்க்கண்டில் 173 பேர், திரிபுராவில் 155 பேர், அசாமில் 80 பேர், உத்தரகாண்டில் 72 பேர், சத்தீஸ்கர் 59 பேர், இமாச்சலப் பிரதேசத்தில் 66 பேர், லடாக்கில் 43 பேர், மேகாலயாவில் 13 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரியில் 13 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் புதுச்சேரியில் 9 பேர் குணமடைந்தனர்.
மணிப்பூர், மிசோரம், அருணாச்சலப் பிரதேசம், அந்தமான் நிகோபர் தீவு, கோவாவில் பாதிக்கப்பட்டோர் யாருமில்லை''.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
14 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago