கருப்பு அங்கி கரோனாவை கவரும் அச்சம்: நீதிபதிகள், வழக்கறிஞர்கள் உடையின் நிறம் மாறுகிறது: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தகவல்

By செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நீதிபதிகள், வழக்கறிஞர்களுக்கு புதிய நிறத்தில்உடைகள் அறிமுகம் செய்யப்படும்என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகள் நேற்று முன்தினம் முதல் நேரில் வந்து வழக்கை விசாரித்து வருகின்றனர். அதேபோல வழக்கறிஞர்களும் நீதிமன்றத்துக்கு வருகின்றனர். ஆனால் வாதி, பிரதிவாதிகள் நேரில் வருவதற்கு அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் வீடியோகான்பரன்ஸ் மூலமே விசாரிக்கப்படுகின்றனர்.

நீதிபதிகள், வழக்கறிஞர்கள் நீதிமன்றத்துக்கு வந்து வழக்கு விசாரணையில் பங்கேற்பதால் அவர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் அவர்கள் அணியும் கருப்பு நிற ஆடை, வைரஸ்களை கவரும் என்பதால் கோட், மேலங்கிகளின் நிறத்தை மாற்ற முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே, நேற்று பொதுநல மனு ஒன்றை விசாரித்தார். அப்போது அவர் கூறும்போது, “நீதிபதிகளும், வழக்கறிஞர்களும் கருப்புநிற கோட், மேலங்கியை தவிர்ப்பது நல்லது. இந்த வகை கருப்புநிற ஆடைகள், வைரஸ் கிருமிகளை எளிதில் கவரும் என்று தெரியவந்துள்ளது. இனி நீதிபதிகள், வழக்கறிஞர்கள் எந்த நிற ஆடைகளை அணிய வேண்டும் என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

மேலும்