2.7 கோடி இளைஞர்கள் வேலையிழப்பு- சிஎம்ஐஇ நடத்திய ஆய்வில் தகவல்

By செய்திப்பிரிவு

ஊரடங்கு உத்தரவால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் (சிஎம்ஐஇ) ஆய்வு நடத்தி வந்தது. இதுகுறித்து நேற்று சிஎம்ஐஇ வெளியிட்டுள்ள வார அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மே 10-ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் நாட்டில் வேலையின்மை விகிதம் 27.1 சதவீதத்திலிருந்து 24 சதவீதமாகக் குறைந்துள்ளது. தொழிற்சாலைகளைத் திறக்க அனுமதித்துள்ளதால் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 36.2 சதவீதத்திலிருந்து 27.6 சதவீதமாக உயர்ந்துள்ளது.

கடந்த ஏப்ரலில் ஊரடங்கு உத்தரவின்போது 20 முதல் 29 வயதில் உள்ள சுமார் 2.7 கோடி இளைஞர்கள் வேலை இழந்துள்ளனர். நாடு முழுவதும் 20 முதல் 24 வயதில் உள்ள 3.42 கோடி பேர் வேலைபார்த்து வந்தனர். இது ஏப்ரலில் 2.09 கோடியாகக் குறைந்தது. 1.3 கோடிக்கும் அதிகமான இளைஞர்கள், இளம்பெண்கள் வேலையை இழந்தனர். அதேபோல 25 முதல் 29 வயதுக்குள்பட்ட 1.4 கோடி பேர் வேலை இழந்தனர்.

அதேபோல 30 முதல் 39 வயதில் உள்ள 3.3 கோடி பேர் வேலை இழந்துள்ளனர். இதில் 86 சதவீதம் பேர் ஆண்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து சிஎம்ஐஇ நிர்வாக இயக்குநர் மகேஷ் வியாஸ் கூறும்போது, “இளைஞர்கள் வேலைவாய்ப்பை இழப்பதால் அவர்களது சேமிப்பில் இது பாதிப்பை ஏற்படுத்தும். எதிர்காலத்தில் இது அவர்களுக்கு சிக்கலை உண்டாக்கும். வாங்கிய கடனை திருப்பிச் செலுத்துவதில் சிக்கல் ஏற்படும். கடன் தொடர்பான குற்றங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்