சிஆர்பிஎப் கேண்டின்களில் இனி உள்நாட்டு தயாரிப்புகள் மட்டுமே விற்பனை; ரூ.2800 கோடிக்கு விற்பனையாகும்: அமித் ஷா அறிவிப்பு

By செய்திப்பிரிவு

மத்திய ஆயுதப்படை போலீஸ் கேண்டின்களில் ஜுன் 1-ம் தேதி முதல் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் மட்டுமே விற்பனை செய்யப்படும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார்.

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஊரடங்கு தொடர்பாகவும் மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். ஏறக்குறைய 6 மணிநேரத்துக்கும் மேலாக இந்த ஆலோசனை நடந்தது. இந்தக் கூட்டத்தில் பெரும்பாலான முதல்வர்கள் ஊரடங்கை தளர்த்தும் முடிவு குறித்து வெவ்வேறு கருத்துக்களை மாநில அரசுகள் முன் வைத்தன. சில மாநில அரசுகள் ஊரடங்கு தொடர வேண்டும் எனவும், சில தளர்த்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தன.

இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு நேற்று உரையாற்றினார். அவர் பேசுகையில் ‘‘ கரோனா பாதி்ப்பால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் பொருளாதார மீட்புக்காக 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிட்டில் சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படும். நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதம் கரோனா மீட்பு பணிகளுக்கு செலவிடப்படும். பொருளாதார மீட்பு பணியில் உள்கட்டமைப்பு பணிகள் மிக முக்கியம். உலக நாடுகளுக்கு பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்கவதில் இந்தியா முக்கிய பங்காற்ற வேண்டும்.’’ எனக் கூறினார்.

இதுகுறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:
பிரதமர் மோடி நேற்றைய தினம் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட உள்நாட்டு தயாரிப்புகளை பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளார். இதன் மூலம் உலக அரங்கில் இந்திய பொருட்களுக்கு பெரும் மரியாதை ஏற்படும்.

மத்திய ஆயுதப்படை போலீஸ் கேன்டின்களில் ஜுன் 1-ம் தேதி முதல் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் மட்டுமே விற்பனை செய்யப்படும். இந்த கேண்டீன்கள் மற்றும் கடைகள் மூலம் 10 லட்சம் மத்திய ஆயுதப்படை போலீஸாரின் குடும்பத்தைச் சேர்ந்த 50 லட்சம் பேர் ஆண்டுக்கு 2800 கோடி ரூபாய்க்கு பொருட்களை வாங்கி வருகின்றனர். அவர்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பொருட்களையே இனிமேல் வாங்குவர். இதுபோலவே நாடுமுழுவதும் மக்களும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட உள்நாட்டு பொருட்களையே வாங்க வேண்டும் என நானும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அமித் ஷா கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

மேலும்