கரோனாவினால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் இந்தியாவை தற்சார்பு நாடாக மாற்றுவதற்குமாக என்று கூறி பிரதமர் மோடி செவ்வாயன்று ரூ.20 லட்சம் கோடி நிதிநிவாரணம் அறிவித்தார்.
இதனை எதிர்க்கட்சியினர் பலரும் விமர்சிக்க, மஹீந்திரா, அதானி உள்ளிட்டோர் வரவேற்றுள்ளனர்.
சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறும்போது, “முன்பு ரூ.15 லட்சம் என்று வாக்குறுதி அளித்தார் இப்போது ரூ.20 லட்சம் கோடி.
133 முறை 133 கோடி மக்களிடம் தவறான வாக்குறுதிகளை அளிக்கிறீர்கள். இந்த முறை உங்களை எப்படி நம்புவது?
» உண்மையான நிதி நிவாரணம் ரூ.4 லட்சம் கோடியே: பிரதமர் நிவாரணம் குறித்து கபில் சிபல் கருத்து
» தலைப்பு.. பிறகு வெற்றுப் பக்கம்: பிரதமர் அறிவித்த பொருளாதார நிவாரணம் குறித்து ப.சிதம்பரம்
இந்த முறை மக்கள் அறிவித்த தொகையில் எத்தனை பூஜ்ஜியங்கள் என்று கேட்க மாட்டார்கள். மாறாக எத்தனை பொய் வாக்குறுதிகள் என்று கேட்பார்கள்” என்று இந்தி மொழியில் ட்வீட் செய்துள்ளார் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ்.
கருப்புப்பணத்தை இந்தியாவுக்குக் கொண்டு வந்து ரூ.15 லட்சத்தை அனைவரது கணக்குகளிலும் போடுவேன் என்று 2014-ல் மோடி வாக்குறுதி அளித்ததாக எழுந்ததை வைத்து அகிலேஷ் யாதவ் தற்போது இது போன்று விமர்சித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago