உண்மையான நிதி நிவாரணம் ரூ.4 லட்சம் கோடியே: பிரதமர் நிவாரணம் குறித்து கபில் சிபல் கருத்து

By ஏஎன்ஐ

கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து பொருளாதாரம் மீள்வதற்கும் இந்தியா தற்சார்புடன் திகழ்வதற்கும் ரூ.20 லட்சம் கோடியை நிவாரணமாக பிரதமர் மோடி செவ்வாயன்று அறிவித்தார்.

அதன் திட்டங்கள் என்னென்ன, யார்யாருக்கு நிவாரணம், எந்த தொழிற்துறைப் பயனடையும் என்பதெல்லாம் இன்னும் முடிவாகவில்லை, இதனை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் கூறும்போது, மொத்த நிவாரணத் தொகையில் அரசிடமிருந்து வரும் தொகை ரூ.4 லட்சம் கோடி மட்டுமே என்றார்.

“பிரதமர் ரூ.20 லட்சம் கோடி நிவாரணம் என்கிறார். வல்லுநர்கள் என்ன கூறுகிறார்கள் என்றால், ஆர்பிஐ ரூ.8 லட்சம் கோடியை அளிக்கும் என்றும் கூடுதல் அரசுக் கடன் ரூ.5 லட்சம் கோடி, ஒரு லட்சம் கோடி சுழற்சி உத்தரவாதம், உண்மையான நிவாரணம் ரூ.4 லட்சம் கோடிதான்” என்று கபில் சிபல் ட்வீட் செய்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

மேலும்