நாளொன்றுக்கு ஒரு லட்சம் கரோனா பரிசோதனை நடைபெறுவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்த்தன் தெரிவித்துள்ளார்.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன் இன்று ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் கிரிஷ் சந்திர மர்மு, லடாக் துணை நிலை ஆளுநர் ஆர்.கே. மாத்தூர், உத்தரகாண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத், இமாச்சலப் பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்குர் ஆகியோருடன் கரோனா பரவல் தடுப்பு குறித்து இன்று ஆலோசனை நடத்தினார். பின்னர் ஹர்ஷ வர்த்தன் கூறியதாவது:
‘‘2020 மே 12ஆம் தேதி நிலவரத்தின்படி மொத்தம் 70,756 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், அதில் 22,455 பேர் குணம் அடைந்துள்ளனர். 2,2,93 பேர் இறந்துள்ளன்ர. கடந்த 24 மணி நேரத்தில் 3,604 பேருக்கு நோய்த் தாக்குதல் புதிதாகக் கண்டறியப்பட்டுள்ளது, 1538 பேர் குணம் அடைந்துள்ளனர்.
கடந்த 14 நாட்களில், நோய்த் தாக்குதல் இரட்டிப்பாகும் காலம் 10.9 நாட்களாக இருந்தது, கடந்த 3 நாட்களில் இது 12.2 ஆக உயர்ந்துள்ளது. மரண விகிதம் 3.2 சதவீதமாகவும், குணம் அடைபவர்கள் விகிதம் 31.74 சதவீதமாகவும் உள்ளது. நேற்றைய நிலவரத்தின்படி, சிகிச்சையில் உள்ள கோவிட்-19 நோயாளிகளில் 2.37 சதவீதம் பேர் ஐ.சி.யூ. சிகிச்சையிலும், 0.41 சதவீதம் பேர் வென்டிலேட்டர்கள் உதவியுடன் கூடிய சிகிச்சையிலும், 1.82 சதவீதம் பேர் ஆக்சிஜன் உதவியுடன் கூடிய சிகிச்சையிலும் இருக்கின்றனர்.
நாட்டில் கோவிட் நோய் கண்டறிவதற்கான மருத்துவப் பரிசோதனைத் திறன் அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார். 347 அரசு ஆய்வகங்கள் மற்றும் 137 தனியார் ஆய்வகங்கள் மூலம் தினமும் 1 இலட்சம் பரிசோதனைகள் நடத்தப்படுகிறது.
இதுவரையில் 17, 62,840 மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. நேற்று 86,191 சாம்பிள்கள் பரிசோதிக்கப்பட்டன. நாளொன்றுக்கு ஒரு லட்சம் கரோனா பரிசோதனை நடைபெறுகிறது. கரோனாவால் உயிரிழப்பை பொறுத்தவரை உலக அளவில் இந்தியாவில் தான் குறைவாக உள்ளது.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்த்தன் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
48 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago