‘‘ஊரடங்கு மீண்டும் தொடரும்; ஆனால் முற்றிலும் மாறுபட்டு இருக்கும்’’- பிரதமர் மோடி உரை: முக்கியத் தகவல்கள்

By செய்திப்பிரிவு

ஊரடங்கு மீ்ண்டும் தொடரும்; ஆனால் முற்றிலும் மாறுபட்டு இருக்கும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

கரோனா பாதிப்பை தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு இன்று இரவு 8 மணிக்கு உரையாற்றினார்.

அவர் உரையில் முக்கிய அம்சங்கள்:

* கடந்த 4 மாதங்களாக உலகம் முழுவதுமே கரோனாவுக்கு எதிரான போராட்டத்தை நடத்தி வருகின்றன. நமக்கு இது ஒரு புதிய அனுபவம், எதிர்பாராத பாதிப்பு.

* உலகம் முழுவதும் ஏற்பட்டு வரும் மாற்றங்களை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது. கரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் நாம் தற்போது முக்கிய கட்டத்தில் இருக்கிறோம்.

* கரோனா பாதிப்பு தொடங்கியபோது நம்மிடம் பிபிஏ கிட்கள் கிடையாது. ஆனால் தற்போது நாள் ஒன்றுக்கு 2 லட்சம் கிட்களை நாமே தயாரிக்கிறோம்.

* கரோனாவுக்கு எதிரான போரில் நாம் கட்டாயம் வெற்றி பெறுவோம். நம்மை நாமே பாதுகாத்துக் கொள்வோம். தொடர்ந்து முன்னேறுவோம். யாரையும் சார்ந்திராமல் செயல்படுவது இந்த காலக்கட்டத்தில் நமக்கு மிகவும் அவசியமான ஒன்று. 130 கோடி இந்தியர்களும் இதற்காக உறுதி ஏற்போம்.

* கரோனா பாதி்ப்பால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் பொருளாதார மீட்புக்காக 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிட்டில் சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

* நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதம் கரோனா மீட்பு பணிகளுக்கு செலவிடப்படும்.

* பொருளாதார மீட்பு நடவடிக்கைான திட்டங்கள் மற்றும் ஊரடங்கு பெரும் தளர்வுகளுடன் மீண்டும் அமல்படுத்தப்படும். மாநில அரசின் முடிவுகளின் படி இது இருக்கும்.

* இதுகுறித்து விரிவான அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

39 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்