அசாம் மாநிலத்தில் பன்றிக்காய்ச்சல் பரவி வரும் நிலையில் அங்கு 14,465 பன்றிகள் உயிரிழந்துள்ளன.
இந்தியாவின் பல பகுதிகளில் கரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கரோனாவின் ஒட்டுமொத்த பாதிப்பு 70 ஆயிரத்தைக் கடந்து, 70 ஆயிரத்து 756 ஆக அதிகரித்துள்ளது. 22 ஆயிரத்து 454 பேர் இதுவரை குணமடைந்து சென்றுள்ள நிலையில், மருத்துவமனைகளில் 46 ஆயிரத்து 8 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழப்புகளைப் பொறுத்தவரை 2 ஆயிரத்து 293 ஆக அதிகரித்துள்ளது.
இருப்பினும் வடகிழக்கு மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகஅளவில் இல்லை. இந்தநிலையில் அசாம் மாநிலத்தில் பன்றிக்காய்ச்சல் பரவி வருகிறது.
இதுகுறித்து அசாம் மாநில கால்நடை வளர்ப்புத் துறை அமைச்சர் அதுல் போரா கூறியதாவது:
அசாம் மாநிலத்தில் 10 மாவட்டங்களில் ஆப்ரிக்க பன்றிக்காய்ச்சல் பரவி வருகிறது. இதனை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதுவரை 14,465 பன்றிகள் உயிரிழந்துள்ளன. பன்றிகளை வளர்ப்போர் கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி கேட்டுக் கொண்டுள்ளோம். இறந்த பன்றிகளின் உடல்களை ஆழமாக குழி தோண்டி புதைக்குமாறு கூறியுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago