ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி நாளை முழு அடைப்பு போராட்டம் நடத்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத் துள்ளது. இதற்கு கம்யூனிஸ்ட் கட்சிகள், காங்கிரஸ் உட்பட இதர கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப் பினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் நாளை ஆந்திராவில் பேருந்துகள், லாரிகள், ஆட்டோக் கள் ஓடாது என தெரிய வந்துள்ளது.
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிட வேண்டுமென வலியுறுத்தி கடந்த 11ம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அழைப்பு விடுத்தது. இதற்கு அனைத்து எதிர் கட்சியினரும், பல்வேறு சங்கங்களும், அமைப்பினரும் ஆதரவு தெரிவித்து இதில் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் இதே கோரிக்கையை வலியுறுத்தி ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி, நாளை (சனிக்கிழமை) மாநிலத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளது. இதற்கு கம்யூனிஸ்ட் கட்சியினர், காங்கிரஸ் உட்பட பல்வேறு தரப்பினர் ஆதரவு அளித்துள்ளனர்.
இதனால் நாளை ஆந்திராவில் அரசு, தனியார் பஸ்கள் இயங்காது. ஆட்டோக்கள் ஓடாது. ஓட்டல்கள், வணிக வளாகங்கள், கடைகள் அடைக்கப்படும். அரசு, தனியார் பள்ளி, கல்லூரிகள் இயங்காது. பெட்ரோல் பங்குகள், திரையரங்குகள் மூடப்பட உள்ளன. பால், மருந்து, காய்கறி, தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மட்டும் விநியோகம் செய்யப்படும் என ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த நிர்வாகி பி. சத்யநாராயணா நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதற்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago