சொந்த ஊர்களுக்கு அனுப்பக் கோரி சூரத் அருகே வன்முறையில் ஈடுபட்ட தொழிலாளர்கள் 100 பேர் கைது

By செய்திப்பிரிவு

உத்தர பிரதேசம், ஜார்கண்ட்,பிஹார், ஒடிசா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள், குஜராத் மாநிலம் சூரத் நகரையொட்டிய ஹசீரா தொழில்பேட்டைநிறுவனங்களில் பணியாற்றுகின்றனர். மோரா கிராமத்தில் வாடகை வீடுகளில் வசிக்கின்றனர்.

கரோனா வைரஸ் தொற்று காரணமாக அமலில் உள்ள ஊரடங்கு தொடர்வதால், சுமார் 14 ரயில்கள், குஜராத் மாநில அரசுபேருந்துகளில் என சூரத் நகரில்இருந்து 30 ஆயிரம் தொழிலாளர்கள் தமது சொந்த மாநிலங்களுக்கும், குஜராத் மாநிலத்துக்குள்ளே உள்ள சொந்த ஊர்களுக்கும் நேற்றுமுன்தினம் அனுப்பப்பட்டனர்.

இதுபற்றி அறிந்த ஹசீரா தொழில்பேட்டையில் பணியாற்றும் தொழிலாளர்களும் தங்களையும் சொந்த ஊர்களுக்கு அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தி தெருக்களில் குவிந்து மோரா கிராமத்தில் போராட்டம் நடத்தினர். அவர்களை கலைந்து போகும்படி போலீஸார் கூறியபோது அதற்குபணியாமல் மோதலில் ஈடுபட்டதுடன் கற்களை வீசி தாக்கியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து போலீஸார் தடியடி நடத்தி. கண்ணீர் புகை குண்டுகளை வீசி அவர்களை கலைத்தனர். இந்த மோதலில் போலீஸார் சிலருக்கு காயம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தையொட்டி 100 தொழிலாளர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.

அவர்கள் மீது போலீஸாரைதாக்கியதாகவும் கலவரத்தில் ஈடுபட்டதாகவும் பொதுச் சொத்துகளை சேதப்படுத்தியதாகவும் கொள்ளை நோய்கள் சட்டத்தின்கீழ் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்