டெல்லியில் கரோனா தீவிரமடைந்துள்ளது இன்று மேலும் 361 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது 5 பேர் பலியாகியுள்ளனர். டெல்லியில் மொத்தம் கரோனாவுக்கு 6923 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், பலியானோர் எண்ணிக்கை 73 ஆக அதிகரித்துள்ளது
இந்நிலையில் பலியானவர்களில் 82% பேர் 50 வயதைக் கடந்தவர்கள் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் அரவிந்த் கேஜ்ரிவால் கூறியதாவது:
கரோனா பலியானவர்கள் குறித்த விவரங்களை ஆய்வு செய்த போது 82% பேர் 50 வயதைக் கடந்தவர்கள் என்று தெரியவந்தது. வயதானவர்கள்தான் அதிகம் மரணிப்பதை பார்த்து வருகிறோம்.
இந்த கடுமையான தொற்றிலிருந்து தப்பிக்க சுகாதார வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்துகிறோம்.
டெல்லியில் சுமார் 7000 பாசிட்டிவ் கேஸ்களில் 1,500 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த 1,500 பேரிலும் 27 பேர் மட்டுமே வென்ட்டிலேட்டரில் உள்ளனர். பெரும்பாலான நோயாளிகள் மிதமான நோய்க்குறிகள் கொண்டுள்ளனர், அல்லது நோய் அறிகுறியில்லாதவர்களாக இருக்கின்றனர்.
ஐசியுவில் 51 நோயாளிகள் உள்ளனர். 75% கரோனா நோய் தொற்றுடையவர்கள் நோய்க்குறி இல்லாதவர்களாக உள்ளனர்.
தனியார் மருத்துவமனைகள் ஆம்புலன்ஸ்களை அளிக்க வேண்டும் என்று அரசு கேட்டுக் கொண்டுள்ளது. அதே போல் கரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவ ஊழியர்களுக்கு கோவிட்19 காய்ச்சல் ஏற்பட்டால் அவர்களுக்குச் சிகிச்சை அளிக்க இரண்டு 5 நட்சத்திர விடுதிகளை ராஜீவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையுடன் இணைத்துள்ளோம்.
டெல்லியில் கரோனா பாசிட்டிவ் எண்ணிக்கை 6923.
இவ்வாறு கூறினார் அரவிந்த் கேஜ்ரிவால்.
முக்கிய செய்திகள்
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago