பொதுத் துறை வங்கிகளின் தலைவர்களுடன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை முக்கிய ஆலோசனை

By பிடிஐ

பொதுத்துறை வங்கிகளின் தலைவர்களுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை காணொலி மூலம் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார் என மத்தியஅரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வங்கிகள் கடன் கொடுத்திருக்கும் அளவு, கரோனாவால் ஏற்பட்ட லாக்டவுனால் பொருளாதாரத்தில் ஏற்பட்ட சுணக்கை சரி செய்து, சிறு,குறு நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்கும் தி்ட்டங்கள், வட்டிக்குறைப்பு பலன் வாடிக்கையாளர்களுக்கு முழுமையாகக் கிடைத்ததா, கடன் திருப்பிச் செலுத்துவதில் அளிக்கப்பட்ட அவகாசத்தை பயன்படுத்திய அளவு ஆகியவை குறித்து ஆலோசிக்கப்படலாம் எனத் தெரிகிறது

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்ட லாக்டவுனுக்கு பின் ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பில் ரெப்போ ரேட்டில் 75 புள்ளிகளைக் குறைத்தது, மேலும், வங்கிகளில் கடன் பெற்றவர்கள் திருப்பி்ச்செலுத்துவதில் 3மாத அவகாசம் வழங்கியது. இந்த திட்டங்களால் எந்த அளவுக்கு மக்கள் பயன் பெற்றுள்ளார்கள், எத்தனை பேர் இதை பயன்படுத்தி வருகிறார்கள் என நாளைய ஆலோசனைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும்

ரிசர்வ் வங்கியி்ன் வட்டிக்குறைவால் வங்கிகளுக்கு கிடைக்கும் கூடுதல் நிதியை வங்கிகள் மக்களுக்கும், நிறுவனங்களுக்கும் எந்த அடிப்படையில் கடன் வழங்குவது குறித்தம் கூட்டத்தில் பேசப்படலாம். மேலும், குறுநிதிநிறுவனங்கள், என்பிஎப்சி ஆகியவற்றுக்கான நீண்டகால ரெப்போ செயல்பாடு(டிஎல்டிஆர்ஓ) எவ்வாறு, கடன் வழங்கிய அளவு ஆகியவை குறித்து ஆய்வு செய்யப்படலாம்.

கரோனா காலத்தில் அவசரநிலைக் கடனாக நடுத்த, சிறு நிறுவனங்கள் தங்கள் செயல்பாட்டுக்கடனில் 10 சதவீதம் அளவுக்கு கூடுதலாக பெற்றுக்கொள்ளலாம், அதிகபட்சமாக ரூ200 கோடி வரை பெறலாம் என்ற திட்டம் குறித்து விரிவாக ஆலோசிக்கப்படும்.

கடன்தவணையை 3 மாதங்கள் தாமதமாக செலுத்தும் தி்்்ட்டத்தில் இதுவரை 3.20கோடி வாடிக்கையாளர்கள் பயன்படுத்தியுள்ளார்கள் என கடந்த வாரம் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். மேலும், மார்ச் ஏப்ரல் மாதங்களில் ரூ.5.66 லட்சம் கோடி கடன் வழங்க ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அதுமட்டுமல்லாமல் வங்கியல்லாத நிதிநிறுவனங்கள், வீடுகட்ட உதவும் நிதிநிறுவனங்களுக்கு மார்ச் 1 முதல் மே 4-ம் தேதிவரை ரூ.77,383 கோடி கடன் வழங்கப்பட்டதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார்.

இந்த அம்சங்கள் குறித்து நாளை வங்கித் தலைவர்களுடன் நிதியமைச்சர் நிர்மலா சீதராமன் விவாதிப்பார் எனத் தெரிகிறது

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

27 mins ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

மேலும்