கரோனா வைரஸால் கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் இந்தியாவுக்குள் வரமுடியாமல் மாலத்தீவில் சிக்கித் தவித்த இந்தியர்களை மீட்கும் வகையில் செயல்படுத்தப்பட்ட ஆப்ரேஷன் சமுத்திர சேது திட்டத்தில், 698 இந்தியர்களை அழைத்துக்கொண்டு கடற்படையின் ஐஎன்எஸ் ஜலஸ்வா கப்பல் இன்று கொச்சி துறைமுகம் வந்து சேர்ந்தது
இந்த 698 பேரில் 595ஆண்கள், 103 பெண்கள், 19 கர்ப்பிணிப்பெண்கள், 10 வயதுக்கும் குறைவான 14 குழந்தைகள் அடங்குவர். இதில் பெரும்பலானவர்கள் கேரளா, தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும் 18 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பயணித்துள்ளனர்.
மாலத்தீவில் சிக்கி இருக்கும் இந்தியர்களை அழைத்தவரும் வகையில் ஆப்ரேஷன் சமுத்திர சேது தி்ட்டத்தில் ஐஎன்எஸ் ஜலஸ்வா கப்பல் புறப்பட்டது. அங்கிருந்து 698 இந்தியர்களை அழைத்துக் கொண்டு மாலேவிலிருந்து வெள்ளிக்கிழமை இரவு கொச்சி நகருக்கு கப்பல் புறப்பட்டு இன்று காலை வந்து சேர்ந்தது.
இதுகுறித்து கொச்சி துறைமுகம் வெளியி்ட்ட செய்தியில் “ மாலத்தீவில் சிக்கியிருந்த 698 இந்தியர்கள் ஐஎன்எஸ் ஜலஸ்வா கப்பல் மூலம் கொச்சி துறைமுகத்துக்கு இன்று காலை 9.30மணிக்கு அழைத்து வரப்பட்டனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கப்பலில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த 440 ேபரும், பிற மாநிலத்தவர்களும் உள்ளனர். இவர்களை தனிமைப்படுத்துவதற்கான பணிகளை கேரள போலீஸ் ஐஜி விஜய் சாகரே தலைமையிலான குழுவினர் செய்துள்ளனர்.
இந்த கப்பபலில் பயணத்தவர்களில் 440 கேரள மாநிலத்தவர் தவிர லட்சத்தீவுகளைச் சேர்ந்த 4 பேர், தமிழகத்திலிருந்து 187 பேர், ஆந்திராவில்ருந்து 8 பேர் கர்நாடகா(8), ஹரியாணா, இமாச்சலப்பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தலா 3 பேர், கோவா, அசாம் மாநிலத்தைச் சேர்ந்த தலா ஒருவர்உள்ளனர்
மேலும் உத்தரகாண்ட், மேற்குவங்கம் மாநிலத்தைச் சேர்ந்த தலா 7 பேர், டெல்லி(4), புதுச்சேரி(3), உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தலா 2 பேர் உள்ளனர்
கப்பலில் இருந்து பயணிகள் இறங்கியவுடன் அவர்களுக்கு தெர்மல் ஸ்கேனிங் செய்யப்பட்டு, குடியேற்ற சோதனைகள் முடிந்தன. மேலும், பயணிகளுக்கு பிஎஸ்என்எல் நிறுவனத்தின புதிய சிம்கார்டு வழங்கப்பட்டு, அனைவரும் செல்போனில் ஆரோக்கிய சேது செயலியை பதிவேற்ற அறிவுறுத்தப்பட்டது
பயணிகளுக்கு யாருக்கேனும் கரோனா அறிகுறி இருந்தால் அவர்களை மருத்துவமனைக்கு சஅழைத்துச் செல்லவும், தனிமைப்படுத்த அழைத்துச் செல்லவும் கேரள அரசு சார்பில் ஆம்புலன்ஸ் தயாராக இருந்தது. மாநில அரசு சார்பில் பேருந்து வசதியும், வாடகைக் கார் வசதியும் செய்யப்பட்டிருந்தது
முக்கிய செய்திகள்
இந்தியா
50 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago