தனக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக சமூகவலைதளங்களில் வெளியான தகவல்களை திட்டவட்டமாக மறுத்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இது திட்டமிட்டு பரப்பப்படும் வதந்தி என கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
‘‘நாடுமுழுவதும் கரோனா வைரஸ் பாதிப்புக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிறது. நாட்டின் உள்துறை அமைச்சராக அதுதொடர்பான பணிகளில் தீவிரமாக ஈடபட்டுள்ளேன். இதுபோன்ற சூழலில் எனது உடல் குறித்து சிலர் சமூகவலைதளங்களில் பரப்பி வரும் தகவல் நேற்றிரவு தான் எனக்கு தெரிய வந்தது.
இந்த சூழலில் இதுபோன்ற விவகாரத்தில் கவனம் செலுத்த தேவையில்லை என எண்ணினேன். இதனால் மகிழ்ச்சி அடையும் சிலர் அந்த கற்பனையில் இருந்து விட்டு போகட்டும். நாம் விளக்கம் கொடுக்கத் தேவையில்லை என கருதினேன்.
ஆனால் பல லட்சக்கணக்கான பாஜக தொண்டர்கள் மற்றும் என் மீது அன்பு கொண்டவர்கள் இதுதொடர்பான தகவலை கேட்டு கடந்த 2 நாட்களாக கவலையடைந்து வருவதாக கேள்விப்பட்டேன். அவர்களின் கவலையை நான் புறந்தள்ள முடியாது. எனவே இதுதொடர்பாக விளக்கம் அளிக்கிறேன். எனக்கு எந்த நோயும் இல்லை. நான் முழு உடல்நலத்துடன் இருக்கிறேன்’’ எனக் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago