இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழப்பு 3.3 சதவீதம் என்ற அளவில் உள்ளது. அதேசமயம் நோயில் இருந்து குணமடைந்துள்ளவர்கள் 29.9 சதவீதமாக உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்த்தன் கூறினார்.
கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு ஸ்தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
மதக்கூட்டங்கள், சமூக கூட்டங்கள் என அனைத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்தும் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. கரானோவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மே 3-ம் தேதியும் பின்னர் மே 17-ம் தேதி வரையிலும் ஊடரங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இந்தியாவில் கரோனா பரவல் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்த்தன் கூறியதாவது:
‘‘இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழப்பு 3.3 சதவீதம் என்ற அளவில் உள்ளது. அதேசமயம் நோயில் இருந்து குணமடைந்துள்ளவர்கள் 29.9 சதவீதமாக உள்ளது. இந்த எண்ணிக்கை மகிழ்ச்சி அளிக்கிறது. அதேசமயம் பாதிக்கப்பட்ட அனைவரையும் குணப்படுத்துவதே எங்கள் இலக்கு.
கரோனா தொற்று இரட்டிப்பாகும் கடந்த 3 நாட்களில் 11 நாட்களாக இருந்தது. அதேசமயம் கடந்த 7 நாட்கள் நிலவரத்தை ஒப்பிட்டால் இந்த வீதம் 9.9 நாட்கள் என்ற அளவில் உள்ளது. கரோனா தொற்று முழுமையாக விரட்டப்பட்ட நாடாக இந்தியா விரைவில் மாறும். ’’ எனக் கூறினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago