சத்தீஸ்கரில் கடும் துப்பாக்கிச்சண்டை: 2 பெண் நக்சலைட்டுகள்  உள்பட 4 பேர் சுட்டுக்கொலை: போலீஸ் அதிகாரி உயிரிழப்பு

By பிடிஐ

சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நந்தகான் மாவட்டத்தில் நேற்று இரவு போலீஸாருக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 பெண் நக்சலைட்டுகள் உள்பட 4 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதில் போலீஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்தார்

இதுகுறித்து நக்சலைட்டு ஒழிப்பு படையின் துருக் மண்டல ஐஜி விவேகானந்த் சின்ஹா நிருபர்களிடம் கூறியதாவது:


ராஜ்நந்தகான் மாவட்டத்தில் உள்ள மன்பூர் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட பர்தானி கிராமத்தில் உள்ள வனப்பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த கிராமத்துக்குள் நேற்று இரவு தேடுதல் வேட்டை நடத்தும் பணியில் பாதுகாப்பு படையினர் இறங்கினர்

அப்போது பாதுகாப்பு படையினரைப் பார்த்ததும் நக்லைட்டுகள் துப்பாக்கியால் சுடத்தொடங்கினர். பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர். இருதரப்பினருக்கும் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 பெண் நக்ஸைட்டுகள் உள்பட 4 பேர் கொல்லப்பட்டனர்.

இ்ந்த மோதலில் போலீஸ் துணை ஆய்வாளர் எஸ்.கே.ஷர்மா உயிரிழந்தார். இவர் மதன்வாடா போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்தார். நக்சலைட்டுகள் உடல் கைப்பற்றப்பட்டு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. நக்ஸலைட்டுகளிடம் இருந்து ஏ.கே.47 ரக எந்திரத்துப்பாக்கி, எஸ்எல்ஆர் துப்பாக்கி, இரு 315 ரக துப்பாக்கி, கையெறிகுண்டுகள், சமையல் பாத்திரங்கள் கைப்பற்றப்பட்டன. பாதுகாப்புப்படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து செல்வதற்கு மீதமுள்ள நக்சலைட்டுகள் தப்பிச் சென்றனர். அவர்களைத் தேடும் பணி தொடர்ந்து வருகிறது” எனத் தெரிவித்தார்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

19 mins ago

இந்தியா

1 min ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்