கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் இந்தியாவுக்குள் வரமுடியாமல் துபாயில் சிக்கித்தவித்த இந்தியர்களில் முதல்கட்டமாக 3 பச்சிளங்குழந்தைகள் உள்பட 179 பயணிகளை அழைத்துக்கொண்டு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இன்று அதிகாலை 1.10 மணிக்கு சென்னை விமானநிலையம் வந்து சேர்ந்தது
கரோனா வைரஸால் கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் இந்தியாவுக்குள் வரமுடியாமல் பல்வேறு நாடுகளில் சிக்கி இருக்கும் இந்தியர்களை தாயகம் அழைத்துவர வந்தேபாரத் மிஷன் தி்ட்டத்தை மத்திய அ ரசு செயல்படுத்தி வருகிறது. கடல்மார்க்கமாக கப்பற்படைக் கப்பல்கள் சமுத்திர சேது திட்டத்தை செயல்படுத்தி வெளிநாடுகளில் சி்க்கியவர்களை மீட்டு வருகின்றன
கடந்த 7-ம் தேதி முதல் 14-ம் ேததிவரை பல்வேறு கட்டங்களாக வெளிநாடுகளில் இருந்து இந்தியர்கள் வந்தேபாரத் மிஷன் திட்டம் மூலம் இந்தியர்கள் தாயகம் அழைத்துவரப்படுகின்றன. கேரளாவில் இதுவரை 4 விமானங்கள் மூலம் மலையாள மக்கள் அழைத்துவரப்பட்டுள்ளனர். வங்கதேசத்திலிருந்து இந்திய மாணவர்களை அழைத்துக்கொண்டு ஸ்ரீநகருக்கு நேற்று விமானம் சென்றது
இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்தியத் தூதரகம் சார்பில் கடந்த ஒருவாரமாக பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட்டு, தாயகம் திரும்ப விருப்பமுள்ள இந்தியர்கள் அதில் பதிவு செய்யக் கோரப்பட்டது. அதில் ஏறக்குறைய 3 லட்சம் பேர் பதிவு செய்திருந்தனர்.
இந்த 3 லட்சம் பேரில் கர்ப்பிணிகள், பச்சிளங்குழந்தைகள், முதியோர், மருத்துவ உதவி தேவைப்படுவோர், வேலையிழந்தோர் என வகைப்படுத்தப்பட்டு முன்னுரிமை அளித்து அழைத்து வரப்படுகின்றனர்.
அந்த வகையில் 3 பச்சிளங்குழந்தைகள் உள்பட 179 பயணிகளுடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் 612 இன்று அதிகாலை 1.10 துபாயிலிருந்து சென்னை சர்வதேச விமானநிலையத்தில் தரையிறங்கியது.
சென்னையில் மொத்தம் 10 விமானங்கள் வரவுள்ளன. நாள் தோறும் இரு விமானங்கள் வீதம் வருகின்றன. அந்த வகையில் இன்று மற்றொரு விமானம் துபாயிலிருந்து புறப்பட்டு சென்னை வந்து சேரும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவி்க்கப்பட்டது
விமானம் மூலம் அழைத்துவரப்பட்ட பயணிகள் அனைவருக்கும் விமானநிலையத்தில் தமிழக அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டபடி சுகாதாரப்பணிகள் 60 பேர் கொண்டகுழுவினர் பரிசோதனையில் ஈடுபட்டனர். அதன்பின் அவர்கள் தங்கள்வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ளும் படி மருத்துவ அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர்
முக்கிய செய்திகள்
இந்தியா
3 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
58 mins ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago