பால் விநியோகம் செய்வதில் சமூக இடைவெளியை பால்காரர் ஒருவர் கடைபிடித்து வருகிறார். இந்த பால் விநியோக புகைப்படம் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி உள்ளது.
நாடு முழுவதும் கரோனா வைரஸ் பரவி வருவதால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பொதுஇடங்களில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அரசு வலியுறுத்தி வருகிறது. இதை பால் விநியோகத்திலும் கடைபிடித்து பாராட்டுகளை குவித்து வருகிறார் பால்காரர் ஒருவர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்தவர் பால்காரர் சஞ்சய் கோயல். இவர் தனது சைக்கிளில் பைப் ஒன்றை இணைத்து சமூக இடைவெளியை உறுதி செய்து தனது வாடிக்கையாளர்களுக்கு பால் விநியோகம் செய்து வருகிறார்.
இந்த பால் விநியோகம் தொடர்பான புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இவர் கடைபிடித்து வரும் இந்த முறை பல வியாபாரிகளுக்கு முன்னுதாரணமாகவும் அமைந்துள்ளது. மேலும் பாராட்டுகளையும் குவித்துள்ளது.
சைக்கிளில் கட்டியுள்ள நீளமான பைப்பில் புனலைப் பொருத்தி அதன் வழியாக பால் விநியோகம் செய்கிறார். இதனால் வாடிக்கையாளர் சுமார் ஒரு மீட்டர் தூரத்தில் நின்று பால் பெற்றுக் கொள்கின்றனர். பால்காரர் சஞ்சய் கோயல் பால் விநியோகம் செய்யும் புகைப்படத்தை, ராஜஸ்தானைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி அவனிஷ்சரண் ட்விட்டரில் வெளியிட்டு பாராட்டினார். இந்தப் புகைப்படம்தான் தற்போது வைரலாகி வருகிறது.
மேலும் நாடு முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள், பொது மக்களிடம் இருந்து சஞ்சய் கோயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago