அவுரங்காபாத் ரயில் விபத்தில் இறந்தவர்களுக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கலும் வேதனையும் தெரிவித்துள்ளார்.
கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் விதமாகக் கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் கடந்த ஒரு மாதமாக சொந்த மாநிலம் செல்ல முடியாமல் சிக்கித் தவித்த புலம்பெயர் தொழிலாளர்கள் ரயில்கள் பேருந்துகள் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர். பல தொழிலாளர்கள் நடந்தே சொந்த மாநிலத்துக்கும் செல்கின்றனர்.
இதில் மகாராஷ்டிராவிலிருந்து புலம்பெயர் தொழிலாளர்கள் மத்தியப் பிரதேச மாநிலத்துக்கு நடந்தே ரயில் இருப்புப்பாதை வழியாகச் சென்றுள்ளனர். இன்று அதிகாலை அந்தத் தொழிலாளர்கள் அவுரங்காபாத்-ஜல்னா ரயில் பாதையில் நடந்துவந்தபோது உடல் அசதி காரணமாக ரயில் தண்டவாளத்தில் படுத்துத் தூங்கினர்.
இன்று காலை 5.30 மணி அளவில் அந்த வழியே சரக்கு ரயில் ஒன்று வந்தது. ரயில் தண்டவாளத்தில் தொழிலாளர்கள் படுத்து உறங்கியதைப் பார்த்த ரயில் ஓட்டுநர் ரயிலை நிறுத்த முயன்றும் முடியாததால் தண்டவாளத்தில் படுத்திருந்த தொழிலாளர்கள் மீது ரயில் ஏறிச் சென்றது. இந்தச் சம்பவத்தில் 14 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.
இந்தநிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அவுரங்காபாத்தில் நிகழ்ந்த ரயில் விபத்தில் பலர் உயிரிழந்தது குறித்து பிரதமர் நரேந்திர மோடி வேதனை தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில் “மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அவுரங்காபாத்தில் நிகழ்ந்த ரயில் விபத்தில் பலர் உயிரிழந்தது அறிந்து மிகுந்த துயருற்றேன். இது தொடர்பாக ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலிடம் பேசினேன். அவர், நிலைமையை தீவிரமாகக் கண்காணித்து வருகிறார். தேவையான அனைத்து உதவிகளையும் அளித்து வருகிறோம்” என்று பிரதமர் கூறினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago