கரோனா வைரஸ் உரு,இயல் மாற்றமடைந்து (mutation) புதிய துணை கரோனா வகை மிகவும் மோசமானது என்று அச்சம் எழுந்துள்ள நிலையில் இந்தியாவின் முன்னிலை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பனா சிஎஸ்ஐஆர் இந்தியர்களைத் தொற்றிய கரோனா வைரஸின் 53 மரபணுத் தொடர் வரிசையை உலக மரபணு தரவுக்காப்பகத்துக்கு அனுப்பி வைத்தது.
இதன் மூலம் வைரஸ் பற்றிய ஆய்வை மேம்படுத்துவதோடு, வாக்சைன் தயாரிப்புக்கும் உதவும் விதமாக இது அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதோடு கூடுதலாக 450 மரபணு தொடர்வரிசைகளையும் அனுப்பவுள்ளதாக சிஎஸ்ஐஆர் தலைமை இயக்குநர் ஷேகர் மந்தே பிடிஐயிடம் தெரிவித்தார்.
நாவல் கரோன வைரஸை தொடர் வரிசையை தற்போது ஐஜிஐபி, செல் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையமான சிசிஎம்பி, நுண்ணுயிரித் தொழில் நுட்ப ஹைதராபாத் கழகம் ஆகியவை மேற்கொண்டு வருகின்றன, பிற சிஎஸ்ஐஆர் கழகங்களும் இதில் விரைவில் இணையவிருக்கின்றன.
“அனைத்து ஃப்ளூ வைரஸ் தரவுகளையும் பகிரும் உலக முன்னெடுப்பு அமைப்பான ஜிஐஎஸ்ஏஐடி அமைப்பிடம் இதுவரை 53 மரபணு வரிசைத்தொடர்கள் அனுப்பப்பட்டுள்ளன. மேலும் 450ஐயும் அனுப்பவுள்ளோம்.
டிஎனே நியூக்லியோடைட்ஸ் என்பதை மரபணு தொடர்தான் கண்டுபிடிக்கும். ஒரு உயிரி எப்படி வளர்ச்சியடைந்து தன்னைப் பராமரித்துக் கொள்ள மரபணுக்கள் எப்படி சேர்ந்து வேலை செய்கிறது என்பதை அறிய இது மிகவும் உதவும்.
மரபணு வரிசைத் தொடர் மூலம் வைரஸின் ஆரம்பம் என்னவென்பதை அறிய முடியும். உதாரணமாக ஒரு கொத்திலிருந்து வைரஸ் தோன்றியிருக்கிறது என்றால், பிற்பாடு நாட்டின் பிற பகுதிகளிலோ, உலகில் வேறு எங்கோ வைரஸ் தொற்று பரவும் போது இதன் ஆரம்பம் எங்கே என்பதை சுலபத்தில் அறிய முடியும்.
இதோடு வைரஸுக்கு எதிரான மருந்துகள், வாக்சைன்கள் தயாரிக்கவும் இந்த மரபணு தொடர் வரிசைகள் பயன்படும்.” என்று சிஎஸ்ஐஆர் தெரிவித்துள்ளது.
இந்த வாரத்தின் தொடக்கத்தில் அமெரிக்காவில் உள்ள அறிவியல் சோதனை மையம் ஒன்று கரோனா வைரசின் புதிய அதிக சக்தி வாய்ந்த இன்னொரு துணை வகை மிகவும் மோசமனது ஒன்று உள்ளதாக தெரிவித்து அச்சுறுத்தியது. இது கரோனா வைரஸின் ஆரம்பகால வகையை விட மோசமானது என்று எச்சரித்திருந்தது.
இந்நிலையில் உலக தரவு காப்பகத்துக்கு அனுப்பப்பட்டுள்ள மரபணு வரிசைத் தொடர் இந்தியர்களிடம் காணப்பட்ட கரோனா வைரஸ் மாதிரிகளாகும்.
இது வரை இந்த தரவுக்காப்பகத்துக்கு உலகம் முழுதிலிருந்தும் 16,000 மரபணு வரிசைத்தொடர்கள் வந்துள்ளன.
உலகம் முழுதும் கரோனாவுக்கு 38 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டனர், இதில் சுமார் 2.6 லட்சம் பேர் பலியாகியுள்ளனர் என்று உலகச் சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
7 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago