கரோனா நிவாரணத்தில் 39.28 கோடி பேர் பயனடைந்தனர் என்று மத்திய அரசு கூறுவது சரியா? கணக்கீடு கூறுவது என்ன?

By பிரிசில்லா ஜெபராஜ்

கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த கொண்டுவரப்பட்ட லாக்டவுன் காலத்தில் பிரதமர் கரீப் கல்யான் திட்டத்தின்(பிஎம்ஜிகேபி) மூலம் நாட்டில் 39 கோடி பயணாளிகளுக்கு ரூ.34 ஆயிரத்து 800 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் புள்ளிவிவர ஆய்வில் 33.71 கோடி பயனாளர்களுக்குத்தான் சென்றடைந்துள்ளது தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட செய்தியில் ஜன் தன் யோஜனா வங்கிக் கணக்குகள் வைத்திருக்கும் 20.5 கோடி பெண்கள் முதல் தவணையாக ரூ500 பெற்றனர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது, மேலும் 5.57 கோடி பேருக்கு 2வது தவணையும் அளிக்கப்பட்டது.

முதல் தவணையான ரூ.500 பெற்ற பெண் இரண்டாவது தவணையையும் பெற்றால் அது எப்படி இன்னொரு பயனாளர் என்ற கணக்காகும் என்று தி இந்து (ஆங்கிலம்) நாளிதழ் சுட்டிக்காட்டிய போது நிதியமைச்சகச் செய்தித் தொடர்பாளர் கணக்கீடு தவறு என்றார்.. சரியான எண்ணிக்கை 33.7 கோடி பயனாளர்கள்தான் என்றார்.

இதனையடுத்து அமைச்சகத்தின் புள்ளிவிவரம் சரிப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் இதே செய்தித் தொடர்பாளர் மேலும் கூறும்போது, உஜ்வாலா திட்டத்தின் கீழ் ’சுமார் 7 கோடி பயனாளர்கள்’ இதில் சேர்க்கப்படவில்லை என்றார்., இப்படிப்பார்த்தால் பயனடைந்தோர் எண்ணிக்கை அதிகமாகும் என்றார்.

மேலும் நிதியமைச்சகம் கூறும் 39 கோடி பயனாளர்கள் என்பதில் பலதரப்பட்ட பயனாளர்களும் அடங்குவார்கள். ஜன் தன் கணக்கு வைத்திருக்கும் பெண்கள் பென்ஷன் வாங்குபவர்களாகவும் இருப்பார்கள் கட்டுமானத் தொழிலாளராகவும் இருப்பார்கள், விவசாயிகளாகவும் இருப்பார்கள், இவர்களை தனித்தனியே பயனாளர்களாகக் கணக்கிட முடியாது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்