மருந்து கட்டுப்பாடு நடைமுறைகள் காலத்துக்கு ஒவ்வாத வகையில் உள்ளன. கடினமான அந்த நடைமுறைகளை மாற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி உள்ளார்.
கரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் இந்திய மருந்து உற்பத்தி நிறுவ னங்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. தற்போது சுமார் 30-க்கும் மேற் பட்ட மருந்துகள் ஆராய்ச்சி நிலை யில் உள்ளன. இதில் சில மருந்துகள் சோதனை நிலையை எட்டியுள்ளன.
இந்நிலையில், கரோனா வைர ஸுக்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி எந்த நிலையில் உள் ளது என்பது குறித்து பல்வேறு மருந்து உற்பத்தி நிறுவன பிரதி நிதிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் ஆலோ சனை நடத்தினார்.
அப்போது பிரதமர் மோடி பேசும்போது, "கரோனா வைர ஸுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஆராய்ச்சியாளர்கள், மருந்து நிறுவனங்கள், மத்திய அரசு ஆகியவை இணைந்து செயல்படுகின்றன. முத்தரப்பு ஒருங்கிணைப்பை மேம்படுத்த வேண்டும். ஆராய்ச்சியை தீவிரப் படுத்த வேண்டும். அறிவியல் ஆராய்ச்சியில் உலகின் தலை சிறந்த நாடு இந்தியா என்பதை நாம் நிரூபிக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.
ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமரின் முதன்மை செயலாளர் பி.கே.மிஸ்ரா, முதன்மை அறிவி யல் ஆலோசகர் விஜய் ராகவன், ஆலோசகர் அமர்ஜித் சின்ஹா, பயோ தொழில்நுட்ப துறை செயலாளர் ரேணு ஸ்வரூப், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இயக்குநர் பலராம் பார்கவா, சுகாதாரத் துறை செயலாளர் பிரீத்தி சுதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் பங்கேற்ற மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடு பட்டிருக்கும் ஆராய்ச்சியாளர் களுக்கு பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டினார். அதேநேரம் மருந்து கட்டுப்பாடு நடைமுறைகள் காலத்துக்கு ஒவ்வாத வகையில் உள்ளன. கடினமான அந்த நடைமுறைகளை மாற்ற வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.
அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் புதிய மருந்துகளை அவசரகால அடிப்படையில் சோதனை செய்ய அந்த நாட்டு சட்டங்கள் அனுமதிக்கின்றன. ஆனால் இந்தியாவில் புதிய மருந் துகளை விலங்குகளுக்கு அளித்து சோதனை நடத்துவதற்குக்கூட பல மாதங்கள் ஆகின்றன.
கரோனா வைரஸ் நோயாளிகளுக்கு 'ரெமிடெசிவிர்' மருந்து நல்ல பலன் அளிப்பதாகக் கூறப்படுகிறது. மேற்கத்திய நாடுகளில் இந்த மருந்து மூலம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆனால் நமது சிவப்பு நாடா நடைமுறைகளால் இந்த மருந்தை பயன்படுத்த முடியாத சூழ்நிலை உள்ளது. எனவே காலத்துக்கு ஏற்ற வகையில் இந்திய மருந்து கட்டுப்பாடு நடைமுறைகளில் மாற்றங்களை செய்ய பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
30 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago