அச்சத்தால் கரோனா தொற்றை மறைக்கும் நோயாளிகள்: விழிப்புணர்வை தீவிரப்படுத்த மத்திய அரசு அறிவுரை

By செய்திப்பிரிவு

குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் கோவிட்-19 மேலாண்மைக்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத் தேவையை சமாளிப்பதற்கான ஆயத்த நிலை குறித்து காணொலி மூலம் ஹர்ஷ் வர்த்தன் ஆய்வு செய்தார்.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன், குஜராத் துணை முதலமைச்சர் மற்றும் சுகாதார அமைச்சர் நிதின்பாய் பட்டேல், மகாராஷ்டிரா சுகாதாரத் துறை அமைச்சர் ராஜேஷ் டோப்பே ஆகியோருடன் இன்று உயர்நிலை ஆய்வு நடத்தினார். மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் சௌபே, மத்திய மாநில அரசுகளின் உயரதிகாரிகள் ஆகியோரும் இதில் பங்கேற்றனர். இந்த இரு மாநிலங்களிலும் கோவிட்-19 நோய்த் தாக்குதல் மேலாண்மைக்குத் தேவையான ஆயத்த நிலைகள் குறித்தும், தற்போதைய நிலவரம் குறித்தும் கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.

மாநிலங்களில் உள்ள நிலைமை குறித்து சுருக்கமான தகவல்கள் தெரிவிக்கப்பட்டது. கோவிட்-19 நோய்த் தாக்குதலால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை இந்த மாநிலங்களின் சில மாவட்டங்களில் அதிகமாக இருப்பது குறித்து அமைச்சர் கவலை தெரிவித்தார்.

சில பகுதிகளில் நோய்த் தொற்று குறித்த தகவல்களை நோயாளிகள் மறைத்து விடுகின்றனர் அல்லது தாமதமாக மருத்துவமனைகளுக்குத் தெரிவிக்கிறார்கள் என்பது பற்றி கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. கோவிட்-19 பாதிப்பு இருப்பதாக அறியப்பட்டால், சமூகத்தில் ஒதுக்கப்படுவோம் என்ற அச்சம் இருப்பதே இதற்குக் காரணம் என்றும் குறிப்பிடப்பட்டது.

இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டால் அப்படி ஒதுக்கி வைக்கக் கூடாது, பாரபட்சம் காட்டக் கூடாது என்பது பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் செயல்களைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று ஹர்ஷ் வர்த்தன் கேட்டுக் கொண்டார். இவ்வாறு செய்வதால், மக்கள் ஆரம்ப நிலையிலேயே மருத்துவப் பரிசோதனைக்கு முன்வந்து சிகிச்சை பெற்றுக் கொள்வார்கள் என்று அவர் குறிப்பிட்டார். இதன்படி விழிப்புணர்வு நடவடிக்கைகளை அனைத்து மாநிலங்களும் தீவிரப்படுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்