கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த கொண்டுவரப்பட்ட லாக்டவுன் காலத்தில் பிரதமர் கரீப் கல்யான் திட்டத்தின்(பிஎம்ஜிகேபி) மூலம் நாட்டில் 39 கோடி பயணாளிகளுக்கு ரூ.34 ஆயிரத்து 800 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
கடந்த மார்ச் 26-ம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஏழைகளுக்கும், விவசாயிகளுக்கம், முதியோருக்கும் இலவச உணவுதானியங்கள், பணப்பலன் ஆகியவற்றை வழங்கும் ரூ.1.70 லட்சம் கோடிதிட்டத்தை அறிவித்தார். இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தப்பட்டு மத்தியஅரசாலும், மாநிலஅரசாலும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
கடந்த 5-ம் தேதி பிம்-கிசான் திட்டத்தின் கீழ் முதல்தவணையாக ரூ.16,394 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதன் படி 8.19 கோடி விவசாயிகளி்ன் வங்கிக்கணக்கில் ரூ.2 ஆயிரம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் ஜன் தன் கணக்கு வைத்துள்ள பெண்களின் வங்கிக்கணக்கில் 20.05 கோடி பயணாளிகளுக்கு ரூ.10,025 கோடி வங்கி மூலம் நேரடியாக முதல்கட்ட தவணை தலா ரூ.500 வீதம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. 2-வது தவணையாக கடந்த 5-ம் தேதி 5.57 கோடி பெண்களின் வங்கிக்கணக்கில் ரூ.2,785 கோடி பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தேசிய சமூக உதவித் திட்டம் மூலம் முதியோர், கணவனை இழந்த பெண்கள், மாற்றுத்திறனாளிகள் என 2.82 கோடி பேருக்கு ரூ.1,400 கோடி வழங்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு பயனாளியும் முதல்கட்ட தவணையாக ரூ.500 ஏற்கெனவே பெற்றுவிட்ட நிலையில் 2-ம் கட்ட தவணையுாக ரூ.500 வழங்கப்பட்டுள்ளது.
பிரதமர் கரீப் கல்யான் அன்னம் திட்டம் மூலம்67.65 லட்சம் மெட்ரிக் உணவு தானியங்கள் 36 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் வழங்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய 16லட்சம் மெட்ரிக் டன் தானியங்கள் 60.33 கோடி பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன
மே மாதத்தில் இதுவரை 22 மாநிலங்களில் 12.39 கோடி பயனாளிகளுக்கு 6 லட்சம் மெட்ரிக் டன் தானியங்கள் வழங்கப்பட்டுள்ளன. 2.42 லட்சம் மெட்ரிக் டன் பருப்பு வகைகள் 5.21 கோடி குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
மேலும், இபிஎப்ஓ அமைப்பில் 9.6 லட்சம் உறுப்பினர்கள் தங்கள் பணத்திலிருந்து இதுவரை ரூ.2,985 கோடி பணம் எடுத்துள்ளனர்.
மகாத்மா ஊரக வேலைவாய்புத்திட்டத்தில் பணிபுரியும் மக்களுக்கான ஊதியம் ஏப்ரல் மாதத்திலிருந்து உயர்த்தப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் இதுவரை ரூ.21,032 கோடி ஊதியமாக இந்த தி்ட்டத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மத்திய அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
முக்கிய செய்திகள்
இந்தியா
46 mins ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago