ஹிஸ்புல்முஜாகிதின் தளபதி ரியாஸ் சுட்டுக்கொலை: காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடவடிக்கை

By செய்திப்பிரிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில் ஹிஸ்புல் முஜாகிதின் இயக்கத்தின் முக்கிய தளபதி ரியாஸ் நைக்கூ சுட்டுக்கொல்லப்பட்டார்.

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திப்போரா என்ற இடத்தில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இந்தத் தகவலின் பேரில், பாதுகாப்பு படையினர் குறிப்பிட்ட இடத்தை சுற்றி வளைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

உடனே சுதாரித்துக்கொண்ட பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற இந்த துப்பாக்கிச்சண்டையில், தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான். சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதி ஹிஸ்புல் முஜாகிதின் இயக்கத்தின் முக்கிய தளபதி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

தொடர்ந்து அப்பகுதியில் துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருவதாக தகவல்கள் கூறுகின்றன. காஷ்மீரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மொபைல் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

மேலும்