ரூ.1,610 கோடி ஒதுக்கீடு: புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் போக வேண்டாம்- கர்நாடக முதல்வர் எடியூரப்பா முறையீடு

By ஏஎன்ஐ

கட்டுமானப் பணிகள் தொடங்கியுள்ளன எனவே வெளிமாநிலத் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்ட கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா, மாநிலத்தின் நிவாரணத்துக்காக ரூ.1610 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

ரியல் எஸ்டேட் உள்ளிட்ட கட்டுமான தொழிலதிபர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தியதையடுத்து புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் செலவதற்கான ரயில்கள் தேவையில்லை என்று எடியூரப்பா ஏற்கெனவே தெரிவித்து விட்டார்.

இந்நிலையில் தொழிலாளர்கள் கரோனாவுக்காக அச்சப்படும் நிலையில் கட்டுமானப்பணிகள் தொடங்கியிருப்பதால் அங்கேயே தங்குமாறு எடியூரப்பா கோரிக்கை விடுக்கிறார்.

இது தொடர்பாக அவர் கூறும்போது, “சுமார் 3,500 பேருந்துகள், ரயில்களில் சுமார் 1 லட்சம் தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தோம். கட்டுமானத் தொழில்கள் தொடங்கி விட்டன, எனவெ புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல வேண்டாம் என்று முறையிடுகிறேன்.

கோவிட்-19 தொடர்பான நிதி நிலைமைகளுக்காக ரூ.1,610 கோடி நிவாரணம் ஒதுக்கியுள்ளேன்.

இதன் மூலம் முடிதிருத்துவோர்கள் 2 லட்சத்தி 30,000 பேர்களுக்கு ஒரு தவணையாக ரூ.5000 தொகையும், 7 லட்சத்து 75,000 ஓட்டுநர்களுக்கும் இதே ரூ.5000 நிவாரணம் ஒரே முறையில் அளிக்கப்படும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்