ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் இன்று பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிக்கும் நடந்த துப்பாக்கிச் சண்டையில் தீவிரவாதி ஒருவர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்
இதுகுறித்து பாதுகாப்பு படை வட்டாரங்கள் தரப்பில் கூறப்படுவதாவது:
புல்வாமா மாவட்டம், அவந்திபோரா பகுதியில் உள்ள ஷர்சாலி கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது
இதையடுத்து சிஆர்பிஎப் 185-வது பட்டாலியன் பிரிவு, ராணுவத்தின் 50 ராஷ்ட்ரிய ரைபிள் பிரிவினர் களத்தில் இறங்கி தீவிரவாதிகளை இரவிலிருந்து தேடினர். அப்போது, மறைந்திருந்த தீவிரவாதி துப்பாக்கியால் பாதுகாப்பு படையினரை நோக்கி சுட்டார். அதன் பின் இரு தரப்பினருக்கும் நடந்த துப்பாக்கிச் சண்டையில் அந்த தீவிரவாதி கொல்லப்பட்டார். தொடர்ந்து தேடுதல் பணிகள் நடந்த வருகின்றன. மேற்கொண்டு எந்த தகவலையும் தெரிவிக்க பாதுகாப்பு படையினர் மறுத்துவிட்டனர்.
இதற்கிடையே காஷ்மீர் மாவட்டம், ட்ரால் பகுதியில் உள்ள சதுரா கிராமத்தில் நேற்று இரவு போலீஸார் நடத்திய தேடுதலில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி ஒருவர் கைது செய்யப்பட்டார் என காஷ்மீர் போலீஸார் தெரிவித்தனர். அன்த தீவிரவாதியிடமருந்து ஏ.கே. 56ரக துப்பாக்கி, 150ரவுண்டு சுடக்கூடிய தோட்டாக்கள், கையெறி வெடிகுண்டுகள், செல்போன்கள் உள்ளிட்ட பொருட்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago