அச்சுறுத்தும் கரோனா: இந்தியாவில் பாதிப்பு 50 ஆயிரத்தை நெருங்குகிறது; 24 மணிநேரத்தில் 3 ஆயிரம்பேர் பாஸிட்டிவ்;குஜராத்தில் 49 பேர்பலி;15 ஆயிரத்தைக் கடந்த மகாராஷ்டிரா

By பிடிஐ


வல்லரக்கன் கரோனா வைரஸ் நாளுக்கு நாள் இந்தியாவில் பாதிப்பை அதிகப்படுத்தி வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவுக்கு 2,958 பேர் பாதிக்கப்பட்டுள்ளதால், நோயாளிகள் எண்ணிக்கை 50 ஆயிரத்தை நெருங்குகிறது

கடந்த 24 மணிநேரத்தில் 126 பேர் உயிரிழந்துள்ளனர், இதனால் பலியானோர் எண்ணிக்கை ஒட்டுமொத்தமாக 1,694ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கரோனாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இதுவரை 49 ஆயிரத்து 39ஆக அதிகரித்துள்ளது. இன்று மாலை அல்லது நாளை காலைக்குள் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 50 ஆயிரத்தை எட்டி விடும். குணமடைந்தோர் எண்ணிக்கை 14 ஆயிரத்து 183 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 33 ஆயிரத்து 514 ஆக இருக்கிறது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் தகவலின்படி நேற்று மாலை வரை 111 உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன.அதில் அதிகபட்சமாக 49 பேர் குஜராத்தில் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிராவில் 34 பேர், ராஜஸ்தானில் 12 பேர், மேற்கு வங்கத்தில் 7 பேர், உத்தரப்பிரதேசத்தில் 3 பேர், தமிழகம், பஞ்சாபில் தலா இருவர், கர்நாடகா, இமாச்சலப்பிரதேசத்தில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர்

இன்று காலை 9 மணி நிலவரப்படி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

''மகாராஷ்டிர மாநிலத்தில் பலியானோர் எண்ணிக்கை 617 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் அந்த மாநிலத்தில் 34 பேர் உயிரிழந்துள்ளனர். அடுத்த இடத்தில் உள்ள குஜராத்தில் நேற்று 49 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 368 ஆக அதிகரித்துள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் நேற்று 11 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 176 ஆக உயர்ந்துள்ளது. மேற்கு வங்கத்தில் 7 பேர் உயிரிழந்ததால் எண்ணிக்கை 140 ஆகவும் அதிகரித்துள்ளது.
டெல்லியில் நேற்று உயிரிழப்பு ஏதும் இல்லாததால் 64 ஆகத் தொடர்கிறது. ராஜஸ்தானில் 12 பேர் உயிரிழந்ததால் 89 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் பலி எண்ணிக்கை 33 ஆகவும் அதிகரித்துள்ளது. தெலங்கானாவில் பலி எண்ணிக்கை 29 ஆக தொடர்கிறது.

உத்தரப் பிரதேசத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 56 ஆகவும், கர்நாடகாவில் 29 ஆகவும்அதிகரித்துள்ளது. ஆந்திராவில் 36 ஆகவும் தொடர்கிறது. பஞ்சாப்பில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். ஜம்மு காஷ்மீரில் 8 பேரும், கேரளாவில் 4 பேரும், ஹரியாணாவில் 6 பேரும், பிஹாரில் தலா 4 பேரும், ஜார்க்கண்டில் 3 பேரும், இமாச்சலப் பிரதேசம் 2 பேரும் கரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர். ஒடிசா, , அசாம், மேகாலயா ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 1,000பேருக்கும் அதிகமானோருக்கு கரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டதையடுத்து, அங்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 15,525 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 2,819 ஆக உயர்ந்துள்ளது.

அதைத் தொடர்ந்து டெல்லியில் 5,104 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,468 பேர் குணமடைந்துள்ளனர். குஜராத்தில் 6,245 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ராஜஸ்தானில் 3,158 பேரும், தமிழகத்தில் 4,058 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் தமிழகத்தில் 1,485 பேர் குணமடைந்துள்ளனர். மத்தியப் பிரதேசத்தில் 3,049 பேரும், தெலங்கானாவில் 1,096பேரும், கேரளாவில் 502 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். 462 பேர் குணமடைந்தனர்.

உத்தரப் பிரதேசத்தில் 2,880 பேர், ஆந்திராவில் 1,717 பேர், கர்நாடகாவில் 671 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீரில் 741 பேர், மேற்கு வங்கத்தில் 1,344 பேர், பஞ்சாப்பில் 1,451 பேர், ஹரியாணாவில் 548 பேர், பிஹாரில் 536 பேர், அசாமில் 43 பேர், உத்தரகாண்டில் 61 பேர், ஒடிசாவில் 175 பேர், சண்டிகரில் 111 பேர், சத்தீஸ்கரில் 59 பேர், லடாக்கில் 41 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜார்க்கண்டில் 125 பேர் , அந்தமான் நிகோபர் தீவில் 33 பேர், இமாச்சலப் பிரதேசத்தில் 42 பேர், திரிபுரவில் 43 பேர், புதுச்சேரியில் 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் புதுச்சேரியில் 5 பேர் குணமடைந்தனர். கோவாவில் பாதிக்கப்பட்டோர் யாருமில்லை. மேகாலயாவில் 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மணிப்பூர், அருணாச்சலப் பிரதேசத்தில் யாரும் கரோனா வைரஸால் பாதிக்கப்படவில்லை. மிசோரத்தில், ஒருவர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்''.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்