வெளி மாநிலத்தவர்களுக்கு சிறப்பு ரயில்: ரூ.24 கோடி கட்டணத்தில் ரூ.20 கோடியை ஏற்றது ரயில்வே

வெளி மாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர் திரும்பியதற்கான சிறப்பு ரயில்களுக்கான ரூ.24 கோடி கட்டணத்தில் ரூ.20 கோடியை ரயில்வே துறை செலுத்தியுள்ளது.

நாடு முழுவதும் ஊரடங்கு காரணமாக போக்குவரத்து முடங்கியதால் வேலை தேடி வெளிமாநிலங்களுக்குச் சென்ற தொழிலாளர்கள் அந்தந்த மாநிலங்களில் முடங்கியுள்ளனர். போதுமான உணவும் கிடைக்காத நிலையில், அவர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்ப ஏற்பாடு செய்யக்கோரி பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதையடுத்து, வெளி மாநிலங்களில் முடங்கிய தொழிலாளர்கள் தங்கள்சொந்த மாநிலம் திரும்பவும் இதற்காக ரயில்களை இயக்கவும் மத்திய அரசு அனுமதி அளித்தது.

அதன்படி, வெளி மாநிலங்களில் தங்கியுள்ள தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலத்துக்கு திரும்புவதற்காக ரயில்வே துறைரயில்களை இயக்கி வருகிறது.கடந்த 1-ம் தேதி முதல் 3-ம் தேதி வரை தொழிலாளர்களுக்காக 34சிறப்பு ரயில்கள் பல மாநிலங்களிலும் இயக்கப்பட்டுள்ளன. இதற்கான செலவு தோராயமாக ரூ.24 கோடி ஆகியுள்ளது.

இதில் 85 சதவீதத்தை அதாவது ரூ.20 கோடியை ரயில்வே துறையே ஏற்றுக் கொண்டுள்ளது. மீதமுள்ள 15 சதவீத (ரூ.4 கோடி) தொகையை சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் கொடுத்துள்ளதாகவும் ரயில்வே உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

43 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்