கடந்த 42 நாள் ஊரடங்குக்கு பிறகு டெல்லியில் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டதால், அதிகாலை 4 மணிக்கே குடிமகன்கள் கூட்டம் அலைமோதியது.
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க கடந்த மார்ச் மாதம் 24-ம்தேதி நாடு தழுவிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. தற்போது இந்த ஊரடங்கு 3-ம் கட்டமாக நீட்டிக்கப்பட்டிருக்கும் நிலையில், சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டன. அதன் ஒருபகுதியாக, வைரஸ் பாதிப்பு அதிகம் இல்லாத பகுதிகளில் மதுபானக் கடைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டது.
அதன்படி, தலைநகர் டெல்லியில் நேற்று முன்தினம் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன. அதேசமயத்தில், அதிகளவில் கூட்டத்தை தவிர்க்க மதுபானங்களின் விலை 70 சதவீதம் அதிகரிக்கப்பட்டது. எனினும், மதுபானங்களை வாங்குவதற்கு அங்கு மக்கள் கூட்டம் அலைமோதியது.
இரண்டாவது நாளான நேற்று, அதிகாலை 4 மணிக்கே மதுபானக் கடைகளில் கூட்டம் கூட தொடங்கியது. மேலும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் நூற்றுக்கணக்கானோர் நெருக்கமாக நின்றதால் வைரஸ் பரவும் அபாயமும் ஏற்பட்டது. இதையடுத்து, போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
7 mins ago
இந்தியா
22 mins ago
இந்தியா
2 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago