வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்டு வருவதற்கு 12 நாடுகளுக்கு 64 விமானங்கள் இயக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் உலகின் பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிலும் கடந்த 40 நாட்களாக ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கு உத்தரவு காரணமாக சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானப் போக்குவரத்து முடங்கியுள்ளது. இதனால், வேலை மற்றும் கல்வி நிமித்தமாக வெளிநாடுகளுக்கு சென்ற இந்தியர்கள் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.
வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்கள் வரும் 7-ம் தேதி முதல் அழைத்து வரப்படுவார்கள் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் நேற்று அறிவித்துள்ளது. வெளிநாடுகளில் சிக்கியுள்ளவர்கள் கடற்படை கப்பல் மற்றும் விமானங்கள் மூலம் கட்டண அடிப்படையில் அழைத்து வரப்படுவார்கள். குறிப்பாக, கரோனா வைரஸ்பாதிப்பு அறிகுறி இல்லாதவர்கள் மட்டுமே அழைத்து வரப்படுவார்கள்.
முதல் கட்டமாக 19 லட்சம் பேர் அழைத்து வரப்படவுள்ளனர். முதலில் ஐக்கிய அரபு அமீரகத்தில் தங்கியுள்ள இந்தியர்கள் அழைத்து வரப்படுவர். அங்கு சுமார் 34 லட்சம் இந்தியர்கள் வேலை பார்த்து வருகின்றனர். அதைத் தொடர்ந்து சவுதி அரேபியா, குவைத்தில் உள்ள இந்தியர்கள் அழைத்து வரப்படுவர்.
» ராஜஸ்தானில் சிக்கிய தொழிலாளர்கள், புனித யாத்ரீகர்கள் வீடு திரும்ப நிதியளித்து உதவிய அஜ்மீர் தர்கா
» ஆந்திராவில் மதுக்கடைகளை திறக்க கடும் எதிர்ப்பு: பெண்கள் திரண்டு போராட்டம்
இந்தநிலையில் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்டு வருவதற்கு 12 நாடுகளுக்கு 64 விமானங்கள் இயக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, குவைத், கத்தார், பஹ்ரைன், மாலத்தீவு, சிங்கப்பூர், அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு மொத்தம் 64 மாவினங்கள் 7-ம் தேதியில் இருந்து இயக்கப்படவுள்ளன. அதுபோலவே மாலத்தீவுக்கு கடற்படை கப்பல் செல்லவுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
26 mins ago
இந்தியா
8 mins ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago