டெல்லி சாஸ்திரி பவன் 4-வது தளம் பூட்டி சீல் வைப்பு: மத்திய சட்டத்துறை அமைச்சக அதிகாரிக்கு கரோனா தொற்று

By பிடிஐ

டெல்லியில் பல்வேறு அமைச்சகங்களின் அலுவலகங்கள் செயல்படும் சாஸ்திரி பவனில், மத்திய சட்டத்துறை அமைச்சகத்தின் ஊழியர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியானதால் 4-வது தளம் முழுமையாகப் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது.

அந்த அதிகாரியுடன் பழகியவர்கள், பேசியவர்கள் அனைவரும் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று மருத்துவ அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதற்கு முன் கடந்த மாதத்தில் டெல்லி ராஜீவ் காந்தி பவனில் இருக்கும், அதாவது விமான அமைச்சகம் செயல்படும் கட்டிடத்தில் நிதி ஆயோக் அலுவலகமும் செயல்பட்டு வருகிறது. நிதி ஆயோக் அலுவலக ஊழியர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியானதையடுத்து, அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

அதன்பின் சிஆர்பிஎப் தலைமை அலுவலகம், பிஎஸ்எப் தலைமை அலுவலகத்தில் பணியாற்றிய அதிகாரிகளுக்கு கரோனா இருப்பது உறுதியானதானதால் அந்த அலுவலகமும் மூடி சீல் வைக்கப்பட்டது. இந்த இரு தலைமை அலுவலகமும் சிஜிஓ வளாகத்தில் இயங்கி வருகின்றன.

இதுகுறித்து சட்ட அமைச்சகத்தின் மூத்த அதிகாரி இருவர் கூறுகையில், “டெல்லி சாஸ்திரி பவனில் 4-வது தளத்தில் இயங்கும் மத்திய சட்டத்துறை அமைச்சகத்தில் பணியாற்றும் அதிகாரி ஒருவருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கேட் எண் 1 முதல் 3 வரை மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது. அந்த 4-வது தளமும் மூடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

மேலும்